தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி கொலை வழக்கில் கைதான 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு! முழுவிபரம் என்ன? - 8 PERSON ARRESTED Goondas Act

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 8:50 PM IST

Updated : Apr 2, 2024, 10:34 PM IST

Goondas Act: தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி மாதம் கொலை வழக்கில் கைதான 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tuticorin
Tuticorin

தூத்துக்குடி: கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தூத்துக்குடி, பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரமுத்து மகன் வடிவேல் முருகன் (28) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெடி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து செந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் இசக்கிமுத்து (32), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பக்கப்பட்டியை சேர்ந்தவர்களான சுப்பையா என்பவரது மனைவி லெட்சுமி (55), சுப்பையாவின் மகன்களான சின்னதம்பி (25), மாரிமுத்து (28), புதியம்புத்தூர் மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரவீன்குமார் (21), திருநெல்வேலி மாவட்டம் சொக்கட்டன்தோப்பு பகுதியை சேர்ந்த குமார் மகன் ஆறுமுகம் (எ) அலெக்ஸ் (23), திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்துபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் பிரவீன் (26) மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் மேல அழகாபுரி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் விஜய் (29) ஆகியோர் புதுக்கோட்டைக் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதில் இசக்கிமுத்து, சின்னதம்பி, மாரிமுத்து, பிரவீன்குமார், ஆறுமுகம் (எ) அலெக்ஸ், பிரவீன், விஜய் மற்றும் லெட்சுமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அப்போதைய புதுக்கோட்டைக் காவல் நிலைய ஆய்வாளர் ராமேஸ்வரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, குற்றவாளிகள் 8 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இசக்கிமுத்து, சின்னதம்பி, மாரிமுத்து ஆகியோர் கடலூர் மத்தியச் சிறையிலும், பிரவின்குமார், ஆறுமுகம் (எ) அலெக்ஸ், பிரவீன், விஜய் ஆகியோர் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலும், லெட்சுமியை மதுரை பெண்கள் தனிச்சிறையிலும் கைது செய்து அடைத்தனர்.

இதையும் படிங்க:முரசொலி அறக்கட்டளை விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது - ஆணையத்திடம் அறிவுறுத்துவதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி! - Murasoli Trust Issue Update

Last Updated : Apr 2, 2024, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details