தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் 104 சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு! - civil judges transfer

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 7:20 AM IST

Civil Judges Transfer in TN: தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.

Civil Judges Transfer in TN
சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் (Image credit: Etv bharat tamilnadu)

சென்னை: தமிழ்நாடு முழுவதும் எழும்பூர் நீதித்துறை நடுவர் வைஷ்ணவி உள்ளிட்ட 104 சிவில் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எழும்பூர் நீதித்துறை நடுவர் வைஷ்ணவி, ஆலந்தூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஏ.கே.என்.சந்திர பிரபா, ஆலந்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற முன்சீப் நித்தியா, ஆலந்தூர் முதன்மை மாவட்ட முன்சீப் முருகன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சைதாப்பேட்டை நீதித்துறை நடுவர் லாவண்யா, சைதாப்பேட்டை செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர் வானதி, சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற பதிவாளர் ஷோபா தேவி, பூந்தமல்லி நீதித்துறை நடுவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிடமாற்றம் செயப்பட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளில் பதவியேற்பார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட கணவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு! - Interim Bail To Attend Father Rites

ABOUT THE AUTHOR

...view details