தமிழ்நாடு

tamil nadu

வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி! - VINESH PHOGAT in Paris Olympics

By ANI

Published : Apr 20, 2024, 10:31 PM IST

Vinesh Phogat: ஆசிய மண்டல தகுதிச் சுற்று அரையிறுதியில் வென்றதன் மூலம், வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கிர்கிஸ்தான்
கிர்கிஸ்தான்

கிர்கிஸ்தான்: வருகிற ஜூலை 26ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டி பிரமாண்டமாக தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதிச் சுற்று கிர்கிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 18 எடை பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில், ஒவ்வொரு எடைப் பிரிவிலும் இறுதிப் போட்டியை எட்டக்கூடிய வீரர், வீராங்கனைகள் பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில், 50 கிலோ எடைப் பிரிவின் தகுதிச்சுற்று அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி, வினேஷ் போகத் வெற்றி பெற்றார். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம், வினேஷ் போகத் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிக்கு இந்தியாவில் இருந்து முன்னதாக அன்திம் பன்ஹால் தகுதி பெற்றார். இவரை அடுத்து, தற்போது வினோஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக, வினேஷ் போகத் 2020ஆம் ஆண்டு ஜாப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கும், 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் தகுதி பெற்றுள்ளார். மேலும், இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுகிறார், வினேஷ் போகத்.

இதையும் படிங்க:வான வேடிக்கை காட்டிய ஹைதராபாத் அணி.. டெல்லிக்கு இமாலய இலக்கு! - SRH Vs DC

ABOUT THE AUTHOR

...view details