தமிழ்நாடு

tamil nadu

ருதுராஜ் - துபே கூட்டணி அதிரடி.. லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு! - CSK Vs LSG

By PTI

Published : Apr 23, 2024, 9:52 PM IST

CSK Vs LSG: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை
சென்னை

சென்னை: ஐபிஎல் தொடரின் 39வது போட்டி இன்று (ஏப்.23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கமே லக்னோ அணி சென்னை அணிக்கு ரஹானேவின் விக்கெட்டைக் கைப்பற்றி அதிர்ச்சியை அளித்தது.

அதன்பின், டேரில் மிட்செல் 11, ஜடேஜா 16 என ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே கூட்டணி சென்னை அணிக்கு ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கெய்க்வாட் முதலில் அரைசதம் அடிக்க, அதன்பின் சிவம் துபே அரைசதம் விளாசினார்.

தொடர்ந்து கெய்க்வாட் சதம் விளாசி ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். சிவம் துபே 66 ரன்கள் எடுத்த நிலையில், இறுதி ஓவரில் ரன் அவுட் ஆனார். இறுதியில், சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. கெய்க்வாட் 108 ரன்களுடனும், தோனி 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லக்னோ அணி சார்பில் மாட் ஹென்றி, மொஹ்சின் கான் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, லக்னோ அணி 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:இன்று வானில் தோன்றவுள்ள 'பிங்க் நிலவு' - சிறப்பம்சங்கள் என்னென்ன? - PINK MOON

ABOUT THE AUTHOR

...view details