தமிழ்நாடு

tamil nadu

சாம் கரண், லிவிங்ஸ்டன் அதிரடியில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி! - PBKS Vs DC

By PTI

Published : Mar 23, 2024, 8:59 PM IST

PBKS Vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PBKSvsDC
PBKSvsDC

மொகாலி: 17வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக ரனக்ள் சேர்த்தனர்.

மார்ஷ் 20 ரன்கள் எடுத்த நிலையில், அர்ஷ்தீப் பந்தில் அவுட்டானார். சற்று நேரத்தில் வார்னர் ஹர்ஷல் படேல் வீசிய பவுன்சரில் 29 ரன்களில் அவுட்டானார். மறுபக்கம் நிதானமாக ரன்கள் சேர்த்த ஷாய் ஹோப் 33 ரன்களுக்கு அவுட்டானார். அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட், வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி 18 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர் வந்த பேட்ஸ்மென்கள் பூய், ஸ்டப்ஸ், அக்சர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாக, டெல்லி பேட்டிங் ஆட்டம் கண்டது. கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். டெல்லி வீரர் அபிஷேக் பொரேல் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பொரேல் 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ஷிகர் தவான் பவுண்டரிகளாக விளாசிய நிலையில், 22 ரன்களுக்கு இஷாந்த் சர்மா பந்தில் போல்டானார். அடுத்து, பேர்ஸ்டோவ் இஷாந்தின் ரன் அவுட்டில் நடையை கட்டினார். பின்னர், இம்பேக்ட் வீரராக களமிறங்கிய பிராப்சிம்ரன் சிங் 26 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 9 ரன்களுக்கு அவுட்டானார்.

இதனையடுத்து சாம் கரண், லிவிங்ஸ்டன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சாம் கரண் மார்ஷ், அக்சர் படேல் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களாக சிதறடித்தார். மறுபக்கம், லிவிங்ஸ்டன் தன் பங்கிற்கு சிக்சர்களாக விளாசினார். இந்த நேரத்தில் 18வது ஓவரை வீசிய கலீல் அகமது, சாம் கரணை 63 ரன்களுக்கு வீழ்த்தினார். கடைசி ஓவரை வீசிய சுமித் குமார் முதல் பந்தில் பிரார் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் லிவிங்ஸ்டன் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க:16 ஆண்டுகளாக தொடரும் சோதனை..ஆர்சிபியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி! - CSK VS RCB IPL MATCH 2024

ABOUT THE AUTHOR

...view details