தமிழ்நாடு

tamil nadu

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!

By PTI

Published : Feb 16, 2024, 11:32 AM IST

Updated : Feb 16, 2024, 4:09 PM IST

RSA Vs NZ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 265 ரன்கள் குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாறிய நிலையில் வில்லியம்சன் சதம் விளாசினார்.

RSA VS NZ
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து த்ரில் வெற்றி

ஹாமால்டன் (நியூசிலாந்து): தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த பிப்.13ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 242 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி 211 ரன்களைப் பெற்று, 31 ரன்கள் பின்னடவைச் சந்தித்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணி நேற்று (பிப்.15) தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்கா அணி 235 ரன்களைக் குவித்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டாம் லாதம் - கான்வே ஜோடி விளையாடியது. 2வது ஓவரில் கான்வே தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 5 ஓவர் முடிவிற்கு 12-0 என்ற கணக்கில் விளையாடியது. 9வது ஓவரில் டாம் லாதம் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 10 ஓவர் முடிவிற்கு நியூசிலாந்து அணி 32-0 என்ற கணக்கில் விளையாடியது.

14 ஓவரில் கான்வே டிபெடிட் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் எல்பிடபிள்யூ ஆனார். அதன்படி, மூன்றாவது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன்களைக் குவித்தது. களத்தில் டாம் லாதம் இருந்தார்.

இந்நிலையில், நான்காவது நாளான இன்று (பிப்.16), வில்லியம்சன் களத்தில் இறங்கி விளையாடினார். 20வது ஓவரில் டாம் லாதம் தனது விக்கெட்டை இழந்தார். பின், ரச்சின் ரவீந்திரா களம் கண்டார். 21வது ஓவரில் வில்லியம்சன் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார்.

35 ஓவர் முடிவிற்கு 92-2 என்ற கணக்கில் விளையாடியது. 47வது ஓவரில் ரச்சின் தனது விக்கெட்டை இழக்க, வில் யாங் களம் கண்டார். 49வது ஓவரில் வில்லியம்சன் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். 50 ஓவர் முடிவிற்கு 125-3 என்ற கணக்கில் விளையாடியது. களத்தில் வில்லியம்சன் - வில் யாங் ஜோடி சிறப்பாக விளையாடியது. 58 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 150 ரன்களைக் கடந்தது.

65 ஓவர் முடிவிற்கு 169-4 என்ற கணக்கில் விளையாடியது. அடுத்த 8 ஓவருக்கு அணிக்கு சொற்ப ரன்கள் மட்டுமே கிடைத்தது. 74வது ஓவரில் வில்லியம்சன் டெஸ்ட் தொடர் போட்டியில், தனது 32வது சதத்தை பதிவு செய்தார். 78வது ஓவரில் வில் யாங் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 200 ரன்களைக் கடந்தது.

வில்லியம்சன் - வில் யாங் ஆகிய இருவரும் அணிக்காக மாறி, மாறி பவுண்டரியை விளாசினர். 88வது ஓவரில் வில் யாங் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 90 ஓவர் முடிவிற்கு 250-3 என்ற கணக்கில் விளையாடியது. 95வது ஓவரில் வில்லியம்சன் பவுண்டரியை விளாசினார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைக் குவித்து, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் டானி பெடிட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வில்லியம்சன் 260 பந்துகளுக்கு 133 ரன்களையும், வில் யாங் 134 பந்துகளுக்கு 60 ரன்களையும் குவித்தனர்.

இதையும் படிங்க:IND Vs ENG: ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சதம் விளாசல்.. முதல் நாளில் இந்தியா அதிரடி!

Last Updated : Feb 16, 2024, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details