தமிழ்நாடு

tamil nadu

கொல்கத்தாவைக் காப்பாற்றிய வெங்கடேஷ் ஐயர்.. மும்பை அணிக்கு 158 ரன்கள் இலக்கு! - MI vs KKR

By PTI

Published : May 11, 2024, 10:57 PM IST

MI Vs KKR: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

Mumbai vs Kolkata IPL Match 2024
Mumbai vs Kolkata IPL Match 2024 (Image Credit: ANI)

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 60வது லீக் ஆட்டம் இன்று (மே 11) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.முன்னதாக மழை பெய்த காரணத்தினால் டாஸ் வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் டாஸ் வீசப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மேலும், போட்டியானது 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இந்த சீசனில் இதுவரை நல்ல தொடக்கத்தை கொடுத்த பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இப்போட்டியில் நிலைக்கவில்லை. தூஷாரா பந்து வீச்சில் பிலிப் சால்ட்டும், பும்ரா பந்து வீச்சில் சுனில் நரைனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் களம் வந்த வெங்கடேஷ் ஐயர் - நிதீஷ் ரானா கூட்டணி கொல்கத்தா அணிக்கு ரன்களைச் சேர்த்தது. 4 ஓவர்கள் நிலைத்து ரன்களைச் சேர்த்த இந்த கூட்டணியை சாவுலா பிரித்தார். வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நிதீஷ் ரானா 33, ரசல் 24, ரிங்கு சிங் 20 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் சாவ்லா தலா 2 விக்கெட்களும், தூஷாரா, அன்ஷுல் கம்போஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:Sex-க்கு அடிமையா நீங்கள்: உங்களை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.! - Sex Addiction Symptoms

ABOUT THE AUTHOR

...view details