தமிழ்நாடு

tamil nadu

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சிஎஸ்கே? கொல்கத்தவுடன் இன்று மோதல்! - IPL 2024 CSK Vs KKR

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 10:23 AM IST

Updated : Apr 8, 2024, 2:33 PM IST

CSK Vs KKR:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (திங்கள்கிழமை) இரவு நடைபெறும், 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

CSK Vs KKR Preview
CSK Vs KKR Preview

சென்னை:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 22வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறவுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பலம் பொருந்திய அணியாக வலம் வந்து கொண்டு இருக்கும் கேகேஆர் அணி, நடப்பு தொடரில் விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல், பில்சால்ட், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி, அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் சொந்த மண்ணில் உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடும் என்பது சந்தேகம் இல்லை.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ஷிவம் துபே, அஜிங்கிய ரஹானே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், டேரில் மிட்செல் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை.

இதனால் இன்றைய போட்டியில் அவர்களிடத்தில் இருந்து அருமையான பேட்டிங் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சை பொறுத்தவரையில் சிறப்பாக செயல்பட்டு வந்த முஸ்தபிசுர் ரஹ்மான், விசா காரணமாக திடீரென அவரது பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்பியதால் கடந்த போட்டியில் விளையாடவில்லை.

அதே போல் மற்றொரு பந்துவீச்சாளரான மதீச பத்திரன, டெல்லிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் இருவரும் விளையாடுவார்களா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 18 முறை சிஎஸ்கே அணியும் 10 முறை கேகேஆர் அணியும் பெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:MI vs DC: நடப்பு சீசனில் முதல் வெற்றி! சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடிய மும்பை! - IPL 2024

Last Updated : Apr 8, 2024, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details