தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் 2024: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு! - Delhi vs kolkata

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 7:40 PM IST

DC vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DC vs KKR
DC vs KKR

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 47வது போட்டி இன்று (ஏப்.29) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 6வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் பிருத்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கொல்கத்தா அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

டெல்லி கேபிடல்ஸ் அணி: ப்ரித்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(விகீ & கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: பிலிப் சால்ட்(விகீ), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

இதையும் படிங்க:கோட் படத்தில் விஜயுடன் நடிக்க மறுத்த குண்டூர் காரம் நடிகை ஸ்ரீ லீலா! என்ன காரணம் தெரியுமா? - Actress Sreleela Rejects Goat Movie

ABOUT THE AUTHOR

...view details