தமிழ்நாடு

tamil nadu

ஈகோ இல்லாமல் இருந்தால் இன்று நீங்கள்தான் உச்சம்.. உங்கள் ராசிக்கான பலன் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 6:20 AM IST

Today Rasipalan in tamil: மாசி 3, பிப்ரவரி 15 வியாழன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

மேஷம்: உங்கள் உண்மையின் மதிப்பு என்ன என்பதை நிரூபித்து காட்டக்கூடிய சிறந்த நாளாக இன்று உள்ளது. பணியிடத்தை பொறுத்தவரை, சிறந்த திட்டங்கள் மற்றும் புதிய ஐடியாக்கள் என நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். சில சமயங்களில் சாதகமான சூழ்நிலைகள் இருக்காது. இருப்பினும், நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நுழைந்த எதிர்மறையான விஷயங்களை விரட்ட கற்றுக் கொண்டால், ஏமாற்றம் என்பது உங்கள் நிரந்தர விருந்தாளியாக இருக்காது.

ரிஷபம்: எல்லாம் விதிதான் காரணம் என்று நீங்கள் நொந்து கொள்ளக்கூடிய நாளாக இன்று இருக்கலாம். அடுத்து வரும் நாட்களும் இப்படித்தான் இருக்கும் என்று நீங்கள் கருதலாம். ஆனால், அப்படி நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், தவறாக முடிவு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அது எந்த வித தாமதமும் இன்றி வெற்றிகரமாக முடியும். இருப்பினும், எந்த விதமான வேலையை முடிக்க வேண்டியுள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்படவும். உங்கள் வேலைக்கு உரிய வெகுமதி அல்லது பலன் விரைவில் கிடைக்கும் என்பதால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்: இன்று புதிய பொறுப்புகள் வரும். இதில் மூழ்குவதால் நீங்கள் இன்று சோர்வாக இருப்பதை உணர்வீர்கள். இதில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை உணர்வீர்கள்.

சிம்மம்: உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஈகோ தடையாக இருக்க இடம் கொடுக்காதீர்கள். காதல் வயப்படுவதற்கு சிறப்பான நாளாக இருக்கும். இருப்பினும், அதை வெளிப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஈகோவை புறம் தள்ளுங்கள்.

கன்னி: இன்றைய நாள் முழுவதும் இனம் புரியாத பயம் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். அதிக நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் சூழ்நிலைகளில் இருந்து தெளிவு பிறக்கும். நீங்கள் இன்று சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்: ரியல் எஸ்டேட் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகள் புதிய உயரத்தை எட்டுவர். இது உங்கள் மனதுக்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும். பணியிடத்தை பொறுத்தவரை, உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு வரும். பணப்பலன்கள் மரபுக்கு மீறியதாக இருக்கும்.

விருச்சிகம்: உங்களுக்கு எரிச்சலும், கோபமும் அதிகம் ஏற்படக் கூடும். அது வரக்கூடிய அதிர்ஷ்டத்தை பாதிக்கும். சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், மாலையில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நீங்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் உணரும் வாய்ப்பு உள்ளது.

தனுசு: இன்று நீங்கள் முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவீர்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளில் மைய நாயகனாக உங்களை ஆக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து தயாராக இருங்கள். உங்கள் நட்சத்திரப்படி, நீங்கள் வியாபார நிமித்தம் வெகுதூரம் பயணம் செய்ய நேரிடலாம்.

மகரம்: நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக, நிறைய தியாகம் செய்து உள்ளீர்கள். வேலையை விட்டுவிட்டு நேரம் ஒதுக்கியது முதல், அவர்களைச் சந்திக்க பெரும் முயற்சி எடுத்து உள்ளீர்கள். கடுமையான பணிகளையும் செய்து முடித்து உள்ளீர்கள். அதற்கான அனைத்து பலன்களையும் அனுபவிக்கும் காலம் இது.

கும்பம்: சிக்கலான விஷயங்களையும், நீங்கள் மிக எளிதாக கையாள்வீர்கள். எனினும், தங்களது அனைத்து பணிகளையும் மற்றவர்கள் உங்களிடம் ஒப்படைத்து விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு பிரச்னை ஏற்பட்டு, மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். எனினும், பலவீனங்களை வலிமையாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.

மீனம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைவாகவோ, குழப்பமாகவோ காணப்படலாம். இது நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி, எளிதான தீர்வுகளை காண்பதற்குகூட கடினமாக்கும். எனவே, அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தவும். சர்ச்சைக்குரிய அல்லது பெரிய திட்டங்களை தவிர்க்கவும்.

ABOUT THE AUTHOR

...view details