மேஷம்:நாள் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய வேலை பட்டியல் நீண்டிருக்கும். திட்டமிடல், கூட்டங்கள் என பல்வேறு முக்கிய வேலைகள் குவிந்திருக்கும். மற்றவர்களிடமிருந்து போதிய உள்ளீடுகள் கிடைக்காததால் சோர்வும், மன உளைச்சலும் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும்போது அவை தெளிவாகும்.
ரிஷபம்:உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் இயக்கப்படாமல், அதற்குப் பதிலாக நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும், திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கும்.
மிதுனம்:வேலைக்கும், குடும்பத்திற்கும் இடையில் உங்கள் நேரத்தை பிரித்து சரியாக கையாள்வீர்கள். உழைப்பில் கவனத்தைத் திருப்பினாலும், குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுவீர்கள். அதுமட்டுமின்றி குடும்பத்தினரை வெளியில் அழைத்துச் செல்ல திட்டமிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். உங்களுடைய கனவுகள் நனவாகும் நாள் இது.
கடகம்:நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்களது பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையையும் மேம்படும்.
சிம்மம்:சுற்றி இருப்பவர்களை வைத்து ஒருவரை எடை போடலாம் என்று ஒரு கருத்து நிலவுவது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், உங்கள் இயல்பான உணர்வுகளின் அடிப்படையில், பலரை நண்பர்கள் ஆக்கியிருப்பீர்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், கண்மூடித்தனமாக நம்பும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களின் சிறப்பான கட்டமைப்பு ஒன்றை நிறுவியிருக்கலாம்.
கன்னி:உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் வெளிப்பட்டு, உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்கத் திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.