தமிழ்நாடு

tamil nadu

ரஷ்ய விமானம் விபத்து! 65 உக்ரைன் போர் கைதிகள் உள்பட 74 பேர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 5:09 PM IST

Updated : Jan 24, 2024, 5:41 PM IST

உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

மாஸ்கோ : உக்ரைன் நாட்டின் 65 கைதிகள் உள்பட 74 பேருடன் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியர்வகள் குறித்த எந்த தகவலும் முதலில் வெளியிடாத நிலையில், தற்போது விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளை போர் நெருங்கிய நிலையில், இரு தரப்பிலும் கடும் சேத விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.

போரில் இரு நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடக்கத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உலகளவில் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இரண்டு நாடுகளும் முரண்டு பிடித்து வருகின்றனர்.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், உக்ரைன் போர்க் கைதிகள் 65 பேர் உள்பட 74 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 11 மணி அளவில் உக்ரைன் எல்லையோர நகரமான ரஷ்யாவின் பெல்க்ரோட் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விமானத்தில் பயணித்த 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேரும் உயிரிழந்ததாக பெல்க்ரோட் மாகாண ஆளுநர் Vyacheslav Gladkov தெரிவித்து உள்ளார்.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள சம்பவம் நடந்த இடத்திற்கு ரஷ்ய ராணுவத்தின் சிறப்பு குழு சென்று உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது. முன்னதாக உக்ரைன் வான் பாதுகாப்பிற்குள் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும் 130 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு அதிபர் வோல்டிமர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் 700வது நாளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அண்மையில் ஒருநாளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட கண்டம் தாண்டும் ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாக உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க :பஞ்சாப்பில் தனித்து போட்டி- ஆம் ஆத்மி அதிரடி! அடுத்தடுத்து காங்கிரசுக்கு பின்னடைவு! இந்தியா கூட்டணியில் விரிசல்? என்ன காரணம்?

Last Updated : Jan 24, 2024, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details