தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திடீர் ராஜினாமா! என்ன நடந்தது? - Shehbaz Sharif quit party president

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 5:59 PM IST

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Etv Bharat
Pakistan Prime Minister Shehbaz Sharif (Image Credit: Reuters)

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் நிறுவனர் தலைவர் நவாஸ் ஷெரீபிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலையதை அடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் மே 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வது குறித்த முக்கிய விவகாரங்களில் முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மே 11ஆம் தேதி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருந்தது. இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சார் ரானா சனனுள்ளா, கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் நவாஸ் ஷெரீப் எற்று வழிநடத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பொது அலுவலக கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரண்டு வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமாபாத் நீதிமன்றம் விடுவித்தது. இதைத் தொடர்ந்து 2024 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் கலந்து கொண்ட அவர், NA-130 Lahore தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாத தாக்குதல்! 7 வீரர்கள் படுகொலை! - Pakistan Attack 7 Dead

ABOUT THE AUTHOR

...view details