தமிழ்நாடு

tamil nadu

பிரபல நடிகர் அடடே மனோகர் காலமானார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 2:49 PM IST

Actor Adade Manohar: பழம்பெரும் நாடக, சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் காலமானார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பழம்பெரும் நாடக, சின்னத்திரை நடிகரும், கதாசிரியருமான அடடே மனோகர் நேற்று (பிப்.28) சென்னையில் காலமானார். அடடே மனோகர் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் இவரே எழுதி, இயக்கி நடித்த நாடகங்களும் அடங்கும். அவை ஒவ்வொன்றும், 60 முறைக்கும் மேல் மேடையேறி உள்ளன.

மிகப் பெரிய தனியார் நிறுவனத்தில், பொறுப்பான துறையில் பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும் நடித்து வந்தார் மனோகர். மேலும், பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களையும் இவர் எழுதி நடித்துள்ளார். அதோடு, ஏராளமான நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1980களில் இவர் எழுதி நடித்த தொடரான 'அடடே மனோகர்' தொடர், இவருக்கு இந்தப் பெயரைப் பெற்றுத்தந்தது.

மேலும், பலரையும் இந்தத் தொடர் வாய்விட்டு சிரிக்க வைத்தது எனலாம். மனைவியை இழந்த இவருக்கு 3 குழந்தைகள். சென்னையில் வசித்து வந்த மனோகர், ஓரளவுக்கு ராகங்களைப் கண்டுபிடித்து பாடுவார் எனக் கூறப்படுகிறது.‌ மேலும், ஓவியத்திலும் ஆர்வம் கொண்ட இவருக்கு, ஓரளவு வரையவும் தெரியுமாம்.

70 கிலோ எடையேயிருந்த இவர், உடம்பில் ஏற்பட்ட ஒரு உபாதையினால், ஸ்டீராய்டு ஊசி (Steroid Injections) ஒன்றை மருத்துவர் போடப் போக, 120 கிலோ வரை எடை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு (பிப்.28) சென்னையில் இவர் காலமானார்.

இதையடுத்து, இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான நாடகங்கள் மற்றும் படங்களின் வாயிலாக, நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவரின் மறைவு, சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாளை முதல் காலவறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details