தமிழ்நாடு

tamil nadu

ரஜினிகாந்த் குட்டிக்கதை கேட்க ரெடியா? - லால் சலாம் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 2:22 PM IST

Updated : Jan 23, 2024, 10:43 PM IST

Lal Salaam: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 26ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது என லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

லால் சலாம் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
லால் சலாம் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

சென்னை: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு லால் சலாம் படத்தின் டீசர் வெளியான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் ரீலிஸ் தேதி பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:காலு மேல காலு போடு ராவண குலமே..பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்திய கீர்த்தி பாண்டியன்

இந்நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று, சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் எனவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையையும், தலைவரின் குட்டி கதை கேட்க ரெடியாகுங்கள் என லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதனையடுத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் ஜெயிலர் பட வெற்றிக்குப் பிறகு ’லால் சலாம்’ படத்திலும், டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கும் ‘வேட்டையன்’ படத்திலும் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘வை ராஜா வை’ படத்திற்குப் பிறகு லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரஜினிகாந்த் கருத்தில் இந்த கேள்வியைத்தான் கேட்க வேண்டும்.. பா.ரஞ்சித் கூறியது என்ன?

Last Updated :Jan 23, 2024, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details