தமிழ்நாடு

tamil nadu

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படங்களின் பட்டியல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 9:06 PM IST

Theatrical Release: பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல காக்க, போர், சத்தமின்றி முத்தம் தா உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை (மார்ச்.01) வெளியாக உள்ளன.

இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்
இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்

சென்னை:தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை தோறும் திரைப்படம் வெளியாவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாளை (மார்ச்.01) போர், ஜோஷ்வா இமை போல் காக்க, சத்தமின்றி முத்தம் தா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

போர்

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் 'போர்'. டி.ஜே. பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் நாளை (மார்ச்.01) முதல் வெளியாக இருக்கிறது.

ஜோஷ்வா இமை போல் காக்க

பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், வருண் நடித்துள்ள திரைப்படம் 'ஜோஷ்வா இமை போல காக்க' (Joshua Imai Pol Kaakha). வருணுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ராஹெய் நடித்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படமும் நாளை முதல் திரைக்கு வரவுள்ளது.

அதோ முகம்

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் அதோ முகம். இப்படத்தில் புதுமுகங்கள் சித்தார்த், சைதன்யா பிரதாப் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனந்த் நாக், சரித்திரன், பிபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண் பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

சத்தமின்றி முத்தம் தா

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் - பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் "சத்தமின்றி முத்தம் தா" இப்படத்திற்கு திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசை அமைத்துள்ளார். பிரபலப் பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். மாறுபட்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

மங்கை

கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை திரைப்படமும் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படங்களுடன் இணைந்து கோ, உலகம் சுற்றும் வாலிபன், ஷாஜகான், சிட்டிசன் உள்ளிட்ட படங்களும் நாளை (மார்ச.01) ரீ ரிலீஸ் ஆகின்றன.

இதையும் படிங்க:தனியாக போட்டியிட தயார்.. செல்வப்பெருந்தகை பதிலின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details