தமிழ்நாடு

tamil nadu

சட்ட நடவடிக்கை பாயும்! - அதிமுக முன்னாள் நிர்வாகியின் அவதூறுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 6:01 PM IST

Updated : Feb 22, 2024, 1:19 PM IST

Actress Trisha: தன்னை பற்றி அவதூறு பேசியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை திரிஷா X வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு. அண்மையில் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. அந்த பேட்டியில், "கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலைபேசி ஆட்சிக்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்றும், கூறியதோடு த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து இதற்குக் கண்டனம் எழுந்து வருகின்றது. குறிப்பாக இன்று இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகை திரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், "கவனம் ஈர்க்க எந்த நிலைக்கும் செல்லும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது மிகவும் அருவருப்பானதாக உள்ளது. தன்னை பற்றி அவதூறு பேசியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் தனது கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட A.V.ராஜு என்பவர் திரைத்துறையைக் குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷாவை சம்பந்தப்படுத்தி அவதூற்றைக் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். வன்மையாக இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் கண்டிக்கிறோம்.

பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரதக் குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்தப் பாரதத் தேசத்தில் பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு மத்திய, மாநில அரசு களைய வேண்டும்" என்று தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:கரும்பு விவசாயிகளுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது என்ன?

Last Updated : Feb 22, 2024, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details