தமிழ்நாடு

tamil nadu

தனுஷின் 50வது படம் 'ராயன்' மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 9:16 AM IST

Rayaan first look: தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தனுஷின் 50வது படம் ‘ராயன்’ மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தனுஷின் 50வது படம் ‘ராயன்’ மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து, இயக்கியுள்ள 'ராயன்' படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராயன் தனுஷின் 50வது திரைப்படமாகும். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராயன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிந்ததாக தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் வெளியாகவுள்ளது. ராயன் பர்ஸ்ட் லுக்கில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் கையில் கையில் கத்தியுடன் ஃபாஸ்ட் ஃபுட் கடையை நடத்துபவர்கள் போல தோன்றுகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது

தனுஷ் ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடித்த ‘பவர் பாண்டி’ என்ற காதல் கதையை இயக்கியிருந்தார். மேலும் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். தனுஷ் கடைசியாக நடித்து இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. மறுபுறம் தனுஷ் பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'தேரி இஷ்க் மெயின்' என்னும் படத்திலும், தெலுங்கில் ராஷ்மிகாவுடன் ஜோடி சேர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: "இப்படித்தான் உயிர் பிழைத்தோம்"- ராஷ்மிகா மந்தனாவின் திக்... திக்... பயண அனுபவம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details