தமிழ்நாடு

tamil nadu

'கொட்டும் மழையில் கட்டுக்கட்டாக பணம்'.. - 'குபேரா' மூவியின் சிலிர்க்க வைக்கும் நாகர்ஜூனா ஃபர்ஸ்ட் லுக்! - Nagarjuna First Look

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 8:45 AM IST

Nagarjuna First Look From Kubera movie: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'குபேரா' படத்தில், முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள நாகர்ஜூனாவின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

NAGARJUNA FIRST LOOK FROM KUBERA
NAGARJUNA FIRST LOOK FROM KUBERA (Photo Credits from Actor Naga Chaitanya's 'X' Account)

சென்னை: இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குபேரா' (Kubera). தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதுமட்டுமின்றி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வரை 7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில், ஒரு கண்டெய்னர் லாரியில் பணம் கட்டுக்கட்டாக உள்ளது. அதற்கு அருகே கொட்டும் மழையில் குடைக்குள் நாகார்ஜுனா நிற்கிறார். அப்போது, மழையில் நனைந்த ஒரு ரூபாய் நோட்டைப் பார்க்கும் நாகார்ஜுனா, தனது சட்டைப் பையிலிருந்து ஒரு புதிய நோட்டை எடுத்து அந்த பணக்கட்டுகளுக்கு இடையே வைக்கிறார். இந்த காட்சி அப்படத்தில் நாகார்ஜுனாவின் நேர்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க: சினிமாவில் சினிமா பற்றி எடுத்தால் ஓடாதா? - ஸ்டார் நாயகன் கவின் நம்பிக்கை! - Kavin About Harish Kalyan

ABOUT THE AUTHOR

...view details