தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் இணைகிறது "கட்டா குஸ்தி" கூட்டணி.. விஷ்னு விஷால் வெளியிட்ட அப்டேட்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 1:39 PM IST

Vishnu Vishal upcoming movie: நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க உள்ளார். முன்னதாக இவர் விஷ்ணு விஷாலை வைத்து "கட்டா குஸ்தி" படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

கட்டா குஸ்தி இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்
கட்டா குஸ்தி இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்

சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். அடிப்படையில் கிரிக்கெட் வீரரான இவர், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான நீர்ப் பறவை, ராட்சசன், முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாவீரன் கிட்டு, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்தது.

இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பதிவு செய்திருந்தது. மேலும், பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிளிக்சில் இப்படம் வெளியாகி மிகுந்த பார்வையாளர்களை கவர்ந்தது.

இதையும் படிங்க:பார்த்திபனின் டீன்ஸ் படத்தின் முதல் பார்வை சென்சார் சான்றிதழுடன் வெளியாகியுள்ளது!

அதன் விளைவாக, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கட்டா குஸ்தி திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். இருவரும் இடையேயான கெமிஸ்ட்ரி இப்படத்தில் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்நிலையில், தற்போது 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி இணைகிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், அத்தயாரிப்பு நிறுவனத்தின் 11வது படமாக (VVS11) உருவாகி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு மீண்டும் இணைவது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் படம் குறித்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாவதாகவும், இதில் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பணியாற்ற உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

குடும்பத்தோடு கொண்டாடும் காமெடி கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகும் என்றும் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, இப்பப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள், தற்போது துவங்கி விருவிருப்பாக நடைபெற்று வருவதாகவும், படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரஜினிகாந்த் குட்டிக்கதை கேட்க ரெடியா? - லால் சலாம் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details