தமிழ்நாடு

tamil nadu

சண்முக பாண்டியனின் 'படைத்தலைவன்' பட இசை பணியை துவங்கிய இளையராஜா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 3:11 PM IST

Padai Thalaivan: மறைந்த நடிகரும், தேதிமுக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படைத்தலைவன்' பாடல் பதிவு துவங்கியுள்ளது.

Padai Thalaivan
படைத்தலைவன்

சென்னை:தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். இப்போது வரையிலும், அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் சென்று, அவரின் நினைவாக தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. அவரது முதல் படமாக அது இருந்தது. அதனைத் தொடர்ந்து, மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். பின்னர் தனது தந்தை விஜயகாந்துடன் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வந்தார். ஆனால், அப்படம் தேர்தல், விஜயகாந்தின் உடல்நிலை ஆகியவற்றால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'படைத்தலைவன்' (Padai Thalaivan) என்ற படத்தில் சண்முக பாண்டியன் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை அன்பு என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும், தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், விஜயகாந்த் படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

தற்போது இப்படத்தின் பாடல் பதிவு தொடங்கியுள்ளது. அதற்காக இளையராஜாவைச் சந்தித்த சண்முக பாண்டியன், இயக்குநர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, இந்த ஆண்டே திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயின் தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி..! எப்போது அறிமுகம்?

ABOUT THE AUTHOR

...view details