தமிழ்நாடு

tamil nadu

ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 10:05 PM IST

Y.S.Sharmila APCC: ஆந்திர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று (ஜனவரி 21) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்பு பதவி ஏற்றுக் கொண்டார்.

Y S Sharmila assumes charge as Andhra Pradesh Congress Committee president
முதல்வர் ஜெகன் மோகன் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார்.

விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று (ஜனவரி 21) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்பு பதவி ஏற்றுக் கொண்டார்.

புதிதாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஷர்மிளா பேசும் போது, "காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.

மேலும் பேசிய அவர், "தனது தந்தை ராஜசேகர் ரெட்டி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PCC) தலைவராக இருந்து இரண்டு முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் தன்னை நம்பி இந்த பொறுப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது சகோதரரும் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP) மீதும் டிடிபி (TDP) மீதும் கடமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தற்போது ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. அதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த தெலுங்கு தேசக் கட்சியின் ஆட்சியிலும் எந்த வளர்ச்சியும் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி மற்றும் டிடிபி ஆகிய இரு கட்சிகளும் ஆந்திர மாநிலத்தை ரூ.10 லட்சம் கோடி கடன் மாநிலமாக மாற்றிவிட்டதாகத் தெரிவித்தார். தற்போது நடைபெறும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஜெகன் மோகன் ரெட்டி அரசிடம் சாலைகள் அமைக்கவும் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் கூட நிதி இல்லாத நிலையில் உள்ளனர். மேலும் ஆந்திர மாநிலத்தில் ஒரு தலைநகரமும் இல்லை அதை அமைக்க போதிய நிதியும் இல்லை. அதே போல் மாநிலத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் மெட்ரோ வசதிகளும் இல்லை என தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்தில் தலித்துக்கு எதிரான வன்கொடுமை 100% அதிகரித்துள்ளதாகவும், சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்கட்சியாக இருந்த போது மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்காகப் போராடினார் ஆனால் முதல்வரான பிறகு அதனைச் செய்யவில்லை.

மத்திய ஆளும் பாஜக அரசு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என தெரிவித்தனர். ஆனால் ஆந்திர மாநிலத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் கூட உருவாக்கவில்லை. ஒய்.எஸ்.ஆர்.சி.பி மற்றும் டிடிபி கட்சிகளுக்கு மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜக கூறிய வாக்குகள் தான என குற்றம் சாட்டினார்.

ஜெகன் மோகன் ரெட்டி மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் எதிரான பிரச்சனையின் போது வாய் திறக்காமல் இருந்தவர். எனது தந்தை ராஜசேகர் ரெட்டி பாஜக-வை கடுமையாக எதிர்த்தார். பாஜக ஒரு வகுப்புவாதக் கட்சியாகும். பாஜக மக்கள் இடையே மத உணர்வுகளை தூண்டிவிட்டு தனக்கான நன்மைகளைத் தேடிக் கொள்வார்கள். எனது தந்தை ராஜசேகர் ரெட்டியின் தொண்டர்கள் காங்கிரஸுடன் இணையுமாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ராமர் கோயில் விழாவில் பங்கேற்க அயோத்தி சென்றடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details