தமிழ்நாடு

tamil nadu

"தேர்தல் வெற்றிக்கு பின் பொது சிவில் சட்டம் அமல்" - உள்துறை அமைச்சர் அமித் ஷா! - UCC will implement says amit shah

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 12:37 PM IST

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமராக பதவியேற்றதும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

பாட்னா:மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலம் பெகுசாராயில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மீண்டும் முத்தலாக் மற்றும் இஸ்லாமியர் தனிநபர் சட்டம் கொண்டு வர இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருவதாகவும், ஆனால் அவர்கள் ஆட்சி அமைக்க மாட்டார்கள் நாட்டில் மீண்டும் முத்தலாக் மற்றும் இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தை அவர்களால் கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், மக்களவை தேர்தலில் வென்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்றும் மோடி பிரதமராகி நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவார் என்று அமித்ஷா கூறினார். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மவோயிஸ்ட் ஊடுருவல்களை பிரதமர் மோடி முடுவுக்கு கொண்டு வந்து உள்ளதாகவும் பீகாரில் நிலவிய வேலைநிறுத்த கலாசாரம் மற்றும் கொலை கொள்ளை கொடூரங்களுக்கு முடிவு கட்டியதாகவும் கூறினார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தீவன ஊழலில் சிக்கியவர்கள் பதவியை விட்டு கீழ் இறக்கப்பட்ட பின், பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாரின் அரசுகள் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த எல்லையையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் பீகாரில் ஆட்சியில் இருந்த போது முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூரை கீழ்த்தரமாக நடத்தியதாகவும், ஆனால் பிரதமர் மோடி நாட்டின் உயரிய விருதை அவருக்கு வழங்கி கவுரவித்து உள்ளதாகவும் அமித் ஷா கூறினார். மக்களவை தேர்தலில் பெகுசராய் தொகுதி பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டுமென அமித் ஷா கூறினார்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த போலி வீடியோ விவகாரம்: தெலங்கானா முதலமைச்சருக்கு டெல்லி போலீஸ் சம்மன்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details