தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற தேர்தல்: ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி உறுதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 6:11 PM IST

ஆந்திர பிரதேச சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து எதிர்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆந்திர பிரதேச சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடனான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா சட்டப்பேரவைக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தெலுங்கு தேசம், பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முன்னதாக மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் மற்றும் எம்.பி ரவீந்திர குமார், பாஜக, தெலுங்கு தேசம், ஜன சேனா ஆகியோரிடையே சுமூகம் ஏற்பட்டு உள்ளதாகவும் விரைவில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க :வாங்கிய கடனை திருப்பி செலுத்தத் தவறிய தாய்! மகனை பிடித்து 14 நாட்கள் சித்ரவதை! ஜார்கண்டில் கோரம்!

ABOUT THE AUTHOR

...view details