தமிழ்நாடு

tamil nadu

நீதிபதி பதவிக்காலம் முடிந்த பின் தீர்ப்பு வழங்குவது முறையற்ற செயல் - சுப்ரீம் கோர்ட் கண்டனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 2:43 PM IST

Supreme Court: சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வு பெற்ற பிறகும் தான் விசாரித்த வழக்கின் தீர்ப்பை 5 மாதம் கழித்து வெளியிட்டார். ஆதலால், இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து மீண்டும் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு பரிசீலிக்கிறது என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Supreme Court
உச்சநீதிமன்றம்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த தனி நீதிபதி தான் விசாரித்து வந்த வழக்கு ஒன்றின் தீர்ப்பை ஒரு வரியாக கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வழங்கினார். பின்னர், அதே வருடம் மே மாதம் 26ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து தான் விசாரித்து வந்த வழக்கின் விரிவான தீர்ப்பைக் கடந்த 2017ஆம் ஆண்டு அக்.23ஆம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்காலம் முடிந்த பிறகும் தீர்ப்பை வெளியிடுகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜால் புயன் ஆகியோர் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, "5 மாதங்கள் கழித்து ஒரு தனி நீதிபதி தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஓய்வு பெற்ற தனி நீதிபதி தனக்கென சில காரணங்களை வைத்துக்கொண்டு இந்த தீர்ப்பை தயார் செய்திருக்கலாம் எனத் தெளிவாக தெரிகிறது.

ஒரு நீதிபதி பதவி விலகிய பிறகு 5 மாதம் வழக்கின் கோப்புகளை வைத்திருப்பது முறையற்ற செயலாகும் என்பதால் இதை எங்களால் அனுமதிக்க முடியாது. ஆதலால் பதவிக்காலம் முடிந்த பிறகு நீதிபதி வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது எனவும் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பரீசிலிக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க:ஒரு மாதத்தில் திருமணம்.. பல் சிகிச்சைக்காக சென்ற இளைஞர் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details