தமிழ்நாடு

tamil nadu

தனி நீதிபதியின் உத்தரவு சட்டவிரோதம் என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி! உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

By PTI

Published : Jan 27, 2024, 6:15 PM IST

SC Takes Suo Motu Cognisance on Calcutta High Court verdict:மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக போலி சாதி சான்றிதழ் பெற்று மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு பெற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் முரண்பட்ட உத்தரவை பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாராணைக்கு வர உள்ளது.

SC Takes Suo Motu Cognisance on Calcutta High Court verdict
உச்சநீதிமன்றம்

டெல்லி:முறைகேடாக வழங்கப்பட்ட சாதி சான்றிதழின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்த மாணவர் தொடர்பான விசாராணையை உடனடியாக சிபிஐ-க்கும் மாற்றுவதாக தனி நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயாவின் ஒற்றை பெஞ்சின் உத்தரவை சட்டவிரோதமானது என தெரிவித்த கல்கத்தா நீதிமன்றம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது.

இதனால், மேற்கு வங்கத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிபதி கங்கோபாத்யாயாவின் உத்தரவுக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இந்த உத்தரவால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டது. தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யா காந்த் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு 24.01.2024 மற்றும் 25.01.2024 தேதிகளில் கல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் தொடர் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்ததோடு, இவ்வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

முன்னதாக, தனி நீதிபதியின் உத்தரவு சட்டவிரோதமானது என கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கங்கோபாத்யாய் ஜன.25 அன்று கூறியிருந்தார். இவ்வழக்கில் நீதிபதி சௌமென் சென் தலைமையில் நீதிபதி உதய்குமார் ஆகியோர் அடங்கிய தனி நீதிபதி விசாரணை செய்தார். ஜன.24-ல் இவ்விசாரணையின் போது, இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாநில அரசு தனது சொந்த விசாரணையில் இவ்வழக்கை முடிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டது.

இது தொடர்பாக நீதிபதி கங்கோபாத்யாய், 'தனி நீதிபதியின் உத்தரவில் இருந்து, அது தடை செய்யப்பட்டபோது, மேல்முறையீட்டு மனுவோ அல்லது நீதிமன்றத்தின் முன் தடை விதிக்கப்பட்ட உத்தரவுகளோ எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது' .மேலும், 'இம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தனது தனிப்பட்ட நலன்களை கருத்தில் கொண்டு' செய்யப்பட்டதாக நீதிபதி சென் 'தவறான முறையில்' உத்தரவு பிறப்பித்தகாக குற்றம்சாட்டினார்.

'இவ்வழக்கில் மேல்முறையீட்டுக்கு முன்னுரிமை அளிக்கலாம் எனவும், அதில் எந்த விதியும் தனக்கு காட்டப்படவில்லை. இந்த உயர்நீதிமன்றத்தில் தடைசெய்யப்பட்ட உத்தரவு இல்லாமல் மற்றும் மேல்முறையீட்டு மெமோராண்டம் இல்லாமல் உத்தரவு பிறப்பிக்க முடியும்' என்று மேலும் நீதிபதி எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டார். இம்மாதிரியான 'சட்டவிரோத மேல்முறையீடு வெற்றிடத்தின் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த தனி நீதிபதியின் உத்தரவை புறக்கணிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை' என அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி சௌமென் சென் மற்றொரு நீதிபதியான அம்ரிதா சின்ஹாவிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான அபிஷேக் பானர்ஜி தொடர்புடைய வழக்கை நேரலை செய்வதை நிறுத்துமாறு கூறியதாகக் கூறப்படும் ஒரு உதாரணமாக கூறி, இந்திய தலைமை நீதிபதியை நீதிபதி கங்கோபாத்யாய் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரத்திற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவின் கீழ் உள்ள நீதிபதி சௌமென் சென், 2021 செப்.16 அன்று உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் தெரிவித்த பரிந்துரையை மீறி நீதியாக எப்படி செயல்படுகிறார்? என தெரியவில்லை எனக் கூறினார்.

மேலும் ஒடிசா உயர்நீதிமன்றம் அவரின் பின்னால் உள்ள நபர்கள் யார்? என எனவும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் உத்தரவை புறக்கணிக்கக்கூடிய இத்தகைய இடமாற்றத்தில் இருந்து அவரை காப்பற்றி கொண்டிருப்பவர்கள் யார்? எனக் குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (ஜன.27) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க:உத்தரபிரதேசம் ஞானவாபி மசூதி.. தொல்லியல் துறையின் அறிக்கை விளக்குவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details