தமிழ்நாடு

tamil nadu

பணமோசடி வழக்கு: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் விடுவிப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 2:54 PM IST

DK Shivakumar: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமாருக்கு எதிரான பணமோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

D K Shivakumar
D K Shivakumar

டெல்லி :கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் மீது கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு டி.கே சிவக்குமார் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அடுத்த மாதமே சிவக்குமாரை ஜாமீனில் டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாகவும் அமலாக்கத்துறை தன் மீது பதிவு செய்து உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என டி.கே சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

டி.கே சிவக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் வழக்கறிஞர் பரமாத்மா சிங் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மனுதாரர் அதிகார வரம்பில் உட்படாத சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக கூறி வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். டி.கே சிவக்குமார் அவரது கூட்டாளி எஸ்.கே சர்மா என்பவருடன் இணைந்து கணக்கில் வராத கோடிக்கணக்கிலான பணத்தை ஹவாலா மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க :கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை உரிமை: முதல் நாடாக பிரான்ஸ் அங்கீகாரம்! மசோதா நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details