தமிழ்நாடு

tamil nadu

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா.. என்ன காரணம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 3:12 PM IST

Updated : Feb 4, 2024, 3:51 PM IST

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

பாட்டியாலா : பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம், பன்வாரிலால் புரோகித் வழங்கினார். தனிப்பட்ட காரணங்கள் மற்றும் வேறு சில கடமைகள் இருப்பதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கவனித்து வந்தார். முன்னதாக தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வந்தார். திமுக அரசு பொறுப்பேற்ற சில காலத்தில் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நாகாலாந்தில் இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :நான் உயிரோடு இருக்கிறேன் - பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ!

Last Updated :Feb 4, 2024, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details