தமிழ்நாடு

tamil nadu

மாடு மீது மோதுவதை தவிர்க்க முடிவு... சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து -10 போலீசார் உள்பட 36 பயணிகள் படுகாயம்! - Chhattisgarh Bus Accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 5:30 PM IST

சத்தீஸ்கரில் பசு மீது மோதாமல் இருக்க திடீரென பேருந்தை திருப்பிய போது ஏற்பட்ட விபத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 10 மத்திய பிரதேச போலீசார் உள்பட 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

ஜெகதல்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தில் ராய்கோட் கிராமத்தில் 36 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்தில் தேர்தல் பணியில் ஈடுபட 10 மத்திய பிரதேச போலீசாரும் பயணித்து உள்ளனர். பேருந்து கீதம் - ஜெகதல்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென சாலையில் குறுக்கே பசு மாடு வந்ததாக கூறப்படுகிறது.

திடீரென சாலையில் புகுந்த பசு மாடு மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் சட்டென திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்துல் பேருந்தில் பயணித்த 10 மத்திய பிரதேச போலீசார் உள்பட 36 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திம்ரபால், ஜெகதல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 5 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது.

பசு மாடு மீது மோதமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திடீரென போதும் கூட, மாடு மீது பேருந்து மோதியதாக சொல்லப்படுகிறது. பசு மாட்டை பாதுக்காக்க திடீரென பேருந்தை திருப்பிய பேருந்தில் கவிழ்ந்து 36 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக பிஜாபூர் மாவட்டத்தில் நக்சலைட் ஒருவரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் நக்சல் படை தலைவர் உள்பட 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு பின் நடத்திய சோதனை வேட்டையில் மற்றொரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். கேஷ்குடுல் கிராமம்ப் பகுதியில் அதிகாலை வேளையில் மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை நடத்திய நக்சல் எதிர்ப்பு ஆபரேஷனில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :"அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித் திட்டம்" - டெல்லி அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு! - Plan Kill Arvind Kejriwal In Jail

ABOUT THE AUTHOR

...view details