தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் ரசாயனம் கலக்காத ஆடைகளுடன் நடைபெற்ற பேஷன் ஷோ!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 6:39 PM IST

Fashion Show: புதுச்சேரியில் கிராமத்துப் பெண்கள் தயாரிக்கும் ரசாயனம் கலக்காத ஆயத்த ஆடைகளை வாடிக்கையாளர்களை அணிய வைத்து நடந்த வித்தியாசமான பேஷன் ஷோ அனைவரையும் கவர்ந்தது.

Etv Bharat
Etv Bharat

கிராமத்து பெண்கள் தயாரிக்கும் ரசாயன கலக்காத ஆடைகள்.. புதுச்சேரியில் நடைபெற்ற வித்தியாசமான பேஷன் ஷோ!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்து உள்ள ஆரோவில் பகுதியில் உபாசனா என்ற பெயரில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுனாமி தாக்குதலுக்குப் பிறகு இங்கு தயாரிக்கப்பட்ட சுனாமிகா பொம்மை, உலக அளவில் புகழ் பெற்றதாக விளங்கியது.

இந்நிறுவனம், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசாயனம் கலக்காத வகையில், இயற்கையான ஆயத்த ஆடைகளை தயாரித்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் துளசி, சந்தனம், கற்றாழை போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளைக் கொண்டு துணிகளை உற்பத்தி செய்து, அவற்றைக் கொண்டு ஆடைகளை தயாரித்து வருகின்றது.

இவற்றை ஆன்லைன், உள்ளூர் கடைகள், வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தனி விற்பனையகம் அமைத்து விற்பனை செய்து வருகிறது. ஆரோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் துவங்கப்பட்ட இந்த ஆயத்த ஆடை நிறுவனம், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் உடைகளை தயாரிக்கிறது. விலை சற்று அதிகம் என்றாலும், உபாசனா உடைகளுக்கென தனி வாடிக்கையாளர்கள் உள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

இவர்களைக் கொண்டே உபாசனா உடைகளை அணிந்து, வித்தியாசமான பேஷன் ஷோ, புதுச்சேரி நகரின் விற்பனைக் கூடத்தில் நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் ரசாயனம் கலக்காத ஆயத்த ஆடைகள் அணிந்து வந்து, ஒய்யார நடை நடந்து அனைவரது கைத்தட்டலையும் பெற்றனர்.

பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க முடியும் என்பதை வெளிபடுத்தும் விதமாக இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்து? டிஜிசிஏ விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details