தமிழ்நாடு

tamil nadu

"நாடாளுமன்றத்தின் கீழ் சிபிஐ, அமலாக்கத்துறை.. 100 நாள் வேலைக் காலம் 200 நாட்களாக உயர்வு - ஊதியம் ரூ.700"- சிபிஐ தேர்தல் அறிக்கை! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 6:15 PM IST

பெண்களுக்கு இடஒதுக்கீடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 700 ரூபாய் ஊதியம், வேலை நாட்கள் 200 ஆக உயர்த்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.

D Raja Communist party of india
D Raja Communist party of india

டெல்லி :அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய புலனாய்வு அமைப்புகள் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு உள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய புலனாய்வு அமைப்புகள் நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவற்றின் பாரபட்சமற்ற விசாரணையில் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாக செய்லபட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், மக்களிடையே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் கூட்டாட்சி கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து போராடுவோம் என்றும் வளர்ந்து வரும் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்யவும், நாட்டின் பொருளாதாரத்தின் தன்மையை மேலும் சமமாகவும், நியாயமாகவும், சமத்துவமாகவும் வைத்திருக்க, சொத்து வரி, பரம்பரை வரி மற்றும் அதிகரித்த பெருநிறுவன வரி போன்ற வரிவிதிப்பு நடவடிக்கைகளுடன் நாட்டின் வள ஆதாரத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகப்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான 50 சதவீத வரம்பை நீக்கக் கோரி அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஷரத்தை நீக்கி, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 700 ரூபாய் ஊதியம், பணிக் காலத்தை 200 நாட்களாக உயர்த்த வழிவகை உள்ளிட்ட வாக்குறுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும் எனறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :"நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற சதி நடைபெறுகிறது" - சோனியா காந்தி குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details