தமிழ்நாடு

tamil nadu

சென்னையிலிருந்து ஆந்திரா சென்ற தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து.. 6 பேர் பலி!

By ANI

Published : Feb 10, 2024, 9:24 AM IST

Updated : Feb 10, 2024, 7:37 PM IST

Andhra Pradesh Bus Accident: சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில், 6 பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai to hyderabad bus met accident at andhra pradesh
ஆந்திராவில் பேருந்து விபத்து

நெல்லூர்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு நேற்று இரவு, சென்னை வடபழனியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த லாரி மீது மோதாமல் இருக்க விலகிச் சென்ற போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. மேலும், இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், 15 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை, நெல்லை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை..!

Last Updated : Feb 10, 2024, 7:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details