தமிழ்நாடு

tamil nadu

"நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா?" - பீகார் சட்டப்பேரவையில் தேஜஸ்வி அதிரடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 3:48 PM IST

Updated : Feb 14, 2024, 9:24 AM IST

Bihar CM: பீகார் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான உரையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா என கேள்வி எழுப்பினார்.

Etv Bharat
Etv Bharat

பாட்னா :பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகா ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறிந்தது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில அளுநரிடம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வழங்கிய நிதிஷ் குமார், தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அன்று மாலையே மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மேலும், நிதிஷ் குமாருடன் சேர்த்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். பீகார் சட்டப்பேரவையில் இன்று (பிப். 12) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

முன்னதாக பீகார் சட்டப்பேரவை சபாநாயகரும், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான அவாத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 125 ஆதரவு வாக்குகளும், 112 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தனர்.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சபாநாயகர் பொறுப்பில் இருந்து அவாத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து துணை சபாநாயகர் இருந்த மகேஷ்வர் ஹர்த்வாரி சபாநாயகராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆர்ஜெடி சட்டமன்ற உறுப்பினர்கள் நீலம் தேவி, சேதன் ஆனந்த், பிரகலாத் யாதவ் ஆகியோர் புதிதாக அமைந்து உள்ள ஜேடியு - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கட்சித் தாவியதாக கூறப்படுகிறது. வாக்கெடுப்பின் போது 3 எம்.எல்.ஏக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் வரிசையில் அமர்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையில் பேசிய பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏறத்தாழ 9 முறை கூட்டணி தாவி முதலமைச்சராக பதவியேறுக் கொண்டதாகவும், அவர் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடியால் உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரசில் இருந்து விலகல்! என்ன காரணம்?

Last Updated : Feb 14, 2024, 9:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details