தமிழ்நாடு

tamil nadu

இண்டிகோ விமானத்தில் குஷன் இல்லாத இருக்கைகள்! இணையத்தில் வைரலாகும் பெண் பயணியின் பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 6:39 PM IST

Indigo Cushion less seats: இண்டிகோ விமானத்தில் குஷன் இல்லாத இருக்கைகள் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : இண்டிகோ விமானத்தில் குஷன் இல்லாமல் இருக்கைகள் இருக்கும் புகைப்படத்தை பெண் பயணி தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் வைரலாகி வருகிறது. யவனிகா ராஜ் ஷா என்ற பெண் பயணி தனது எக்ஸ் பக்கத்தில், "அழகாக இருக்கிறது இண்டிகோ, நான் பத்திரமாக தரையிறங்குவேன் என நம்புகிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

மேலும் அவர் பெங்களூருவில் இருந்து போபால் நோக்கி சென்ற இண்டிகோ 6E 6465 என்ற விமானத்தில் குஷன் இல்லாமல் இருக்கைகள் இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அதேநேரம் இந்த பதிவு குறித்து இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க :3 அடி உயரத்தில் மருத்துவர்... திறமைக்கு உயரம் முக்கியமல்ல.. போராடி மருத்துவரான சுவாரஸ்யம்!

ABOUT THE AUTHOR

...view details