தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானாவில் கோர விபத்து: 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 12:03 PM IST

Hyderabad Car Accident: ஹைதராபாத்தில் திருமண விழாவில் பங்கேற்று விட்டு கார்நாடகா மாநிலம் பெல்லாரி நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் கொத்தகோட்டா பகுதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளனதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத் கார் விபத்து
Hyderabad Car Accident

ஹைதராபாத்:கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த 12 பேர் , ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற பின்னர் இன்று அதிகாலை காரில் பெல்லாரியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து கொத்தகோட்டா பகுதியில் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 7 மாத குழந்தையான யாசிர், புஷ்ரா (2), மரியா (5), அப்துல் ரஹ்மான் (62) மற்றும் சலீமா பீ (85) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'திமுகவால் மத்தியில் ஆட்சி மாற்றம்..நரேந்திர மோடி சிறைக்கு செல்வது உறுதி' - ஆ.ராசா பரபரப்பு பேச்சு

விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மேலும், ஒருவர் வனபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுநரின் தூக்க கலக்கத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி காரில் இருந்தவர்களை மீட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் மரத்தில் மோதி குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:LIVE:மயிலாடுதுறையில் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..நேரலை

ABOUT THE AUTHOR

...view details