ETV Bharat / sukhibhava

குறட்டை பிரச்னைக்கு இதுவும் காரணமா? - மூக்கு எலும்பு வீக்கத்தால் வரும் தொல்லை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 5:44 PM IST

Updated : Sep 8, 2023, 6:58 PM IST

மூக்கில் உள்ள எலும்புகள் விரிவடைவதால் மனிதர்கள் உடல்நல ரீதியாக எதிர்கொள்ளும் உபாதைகள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் சுக்பீர் சிங்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: டர்பினேட் ஹைபர்டிராபி பிரச்சினை உள்ளவர்களுக்கு தூக்கத்தில் குறட்டை விடுதல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை பொதுவான அறிகுறியாக இருக்கும் நிலையில், அதனை தொடர்ந்து, இது தலைவலி மற்றும் சைனஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும் என மருத்துவர் சுக்பீர் சிங் கூறியுள்ளார். மேலும் இதற்கான காரணம், இதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து ஈடிவி பாரத்திற்கு அவர் பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் மூக்கில் உள்ள நாசி எலும்புகள் விரிவடைதலை டர்பினேட் ஹைபர்டிராபி என மருத்துவ மொழியில் கூறுகிறார்கள் எனவும், இந்த நாசி எலும்புகள் விரிவடைவதால் மூக்கின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படாது எனவும் சுக்பீர் சிங் விளக்கம் அளித்துள்ளார். மாறாக இது மனிதர்களுக்கு உடல்நல ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மூக்கின் கட்டமைப்பு; மூக்கின் முக்கியத்துவம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். மூக்கின் துவாரங்கள் வழியாக ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு உயிர்கள் வாழுகின்றன. இந்த மூக்கின் கட்டமைப்பை இயற்கை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளது என்றே சொல்லலாம். எலும்பு, குருத்தெலும்பு, நாசி பத்தி, பாராநேசல் சைனஸ்கள், திசுக்கள், மயிர்கள் உள்ளவைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது மூக்கு. ஒவ்வொன்றும் அதன் முக்கியமான பணிகளை மேற்கொண்டு உயிர்வாழ ஆதாரமாக விளங்குகிறது.

நாசி பத்தியின் பணி ; மூக்கில் உள்ள நாசி பத்தி கட்டமைப்பு, சுவாசிக்கும் காற்றை ஈரப்பதமாக்குவதற்கும் வடிகட்டுவதற்கும் உதவுகின்றன. இந்த நாசி பத்தியில் ஏற்படும் ஒருவகையான விரிவாக்கத்தை அல்லது வீக்கத்தை டர்பினேட் ஹைபர்டிராபி எனக்கூறுகிறோம்.

டர்பினேட் ஹைபர்டிராபியால் ஏற்படும் விளைவுகள்; மூக்கில் இந்த வீக்கம் ஏற்படும்போது குறட்டை விடுதல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை தாண்டி தொடர்சியான தலைவலி, ஒற்றை தலைவலி, சைனஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். இதனால் பாதிக்கப்படுபவரின் அன்றாட வாழ்க்கை மிக கடினமான முறையில் பாதிக்கப்படும்.

நாள்பட்ட டர்பினேட் ஹைபர்டிராபியால் ஏற்படும் பாதிப்புகள்; இந்த வகை பிரச்சனை நாசி எலும்புகளில் நீங்காத வீக்கத்தை காண்பிக்கிறது. இதன் காரணமாக நோய் மிகவும் கடுமையான அறிகுறிகள் வெளிப்படும் மற்றும் பாதிக்கப்பட்டவர் மூச்சு விடுதல் உள்ளிட்ட பல பிச்சனைகளில் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆனால் கர்ப்பிணி பெண்களில் சிலருக்கு சாதாரண டர்பினேட் ஹைபர்டிராபி ஏற்படுவது பொதுவாக காணப்படுகிறது. இது காலப்போக்கில் தானாக சரியாகி விடும் எனவும் மருத்துவர் சுக்பீர் சிங் கூறியுள்ளார்.

டர்பினேட் ஹைபர்டிராபியில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

  • தனிமனித மற்றும் ஒட்டு மொத்த வீட்டை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுதல்.
  • ஒவ்வாமையை முறையாக நிர்வகித்தல்.
  • டர்பினேட் ஹைபர்டிராபியில் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு ஆரம்பகட்டத்திலேயே சரி செய்து கொள்ளவது சிறந்தது.
  • கடுமையான வெயில் மற்றும் ஈரப்பதம் உள்ள நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளிடம் இருந்து ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் அவற்றிடம் இருந்து விலகி இருத்தல்.
  • உடுத்தும் உடைகள், படுக்கும் மெத்தை மற்றும் போர்வைகளை சுத்தமாக தூசி அண்டாதபடி வைத்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக, உங்கள் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறைகளை கடுமையாக பாதிக்கும் டர்பினேட் ஹைபர்டிராபியில் இருந்து உங்களை தற்காத்துக்கொண்டு நிம்மதியான வாழ்வை பெறுங்கள் என்றார் மருத்துவர் சுக்பீர் சிங்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து மருத்துவர் ரெமா சந்திரமோகன் கூறும் அறிவுரைகள்!

Last Updated : Sep 8, 2023, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.