ETV Bharat / sukhibhava

Diwali Legiyam: இனிப்பு பிரியர்களே அலர்ட்…தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் மட்டும் இல்ல லேகியமும் சேத்து செய்யுங்க.. ஏன் தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 2:27 PM IST

Updated : Nov 11, 2023, 2:39 PM IST

Diwali Legiyam: தித்திக்கும் தீபாவளியை இனிப்புகள் இல்லாமல் நம்மால் கடக்க முடியாது, அப்படி பண்டிகை நாட்களில் அளவுக்கு மீறி இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று பிரச்சனைகளை தடுக்கும் தீபாவளி லேகியத்தின் செய்முறையை இதில் காணாலாம்.

how to make diwali legiyam
இனிப்பு பிரியர்களே அலர்ட்...தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் சாப்பிடும் போது கூடவே இதையும் சாப்பிடுங்க!

சென்னை: பண்டிகை நாட்களை இனிப்பு இல்லாமல் கொண்டாட முடியாது, அதுவும் தீபாவளி என்றாலே முக்கிய பங்கு பலகாரத்திற்கு தான். மற்ற நாட்களில் சாப்பிடுவதை விட தீபாவளியின் போது விதவிதமாக, அளவுக்கு மீறி இனிப்புகளை நாம் சாப்பிடுவதுண்டு. இதனால் அஜீரணம் உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில், நிறைய இனிப்புகளும் சாப்பிடனும், வயிற்றையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ளனும் என்றால் இந்த தீபாவளி லேகியத்தை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள்.

தீபாவளிக்கு பலாகரம் செய்ய தொடங்கியதும் கையோடு இந்த தீபாவளி லேகியத்தையும் செய்து விடுங்கள். அப்போது தான் தீபாவளியின் போது நன்றாக இனிப்புகளை சாப்பிட்டு எந்த விதமான உடல் உபாதைகளும் இன்றி, தீபாவளியை கொண்டாடமுடியும்.

லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:

  • தனியா - கால் கப்
  • சுக்கு - 10 கிராம்
  • கிராம்பு - 4
  • சித்தரத்தை - 10 கிராம்
  • சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • கண்டந்திப்பிலி - 10 கிராம்
  • அரிசி திப்பலி - 10 கிராம்
  • வெல்லத்தூள் - 100 கிராம்
  • தேன் - அரை கப்
  • நெய்- 1 கப்
  • ஓமம் -1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி, சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை இடித்து தூள் செய்துக் கொள்ளவும். பின் கனமான பாத்திரத்தை எடுத்து அதில் நெய், வெல்லத்தூள், தேன் இவற்றை தவிர மற்ற எல்லா பொருட்களையும் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். பின் அதனை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

முழுமையாக ஆறியதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் அதனை மிக்ஸியில் போட்டு நைஸாக அறைத்துக்கொள்ளவும். அறைத்து வைத்த கலவையை குழம்பு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து கலவயை ஊற்றி அடிபற்ற விடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருங்கள். தண்ணீர் சுண்டியதும் அதில் வெல்லத்தூள் போட்டு நன்றாக கிளறி விடுங்கள். பின், அந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாக சுண்ட கிளறுங்கள். நன்றாக சுண்டக்காய்ச்சியதுடன் பாத்திரத்தை இறக்கிவிட்டால் தீபாவளி லேகியம் ரெடி. (குறிப்பு: லேகியம் செய்யும் போது அடிப்பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு சற்று கனமான பாத்திரத்தை உபயோகித்தால் நல்லது) .

டிப்: தீபாவளி லேகியம் செய்ய முடியாதவர்கள் தலா ஒரு டஸ்பூன் அளவு ஓமம், சுக்கு, வெல்லம் எடுத்து பொடியாக்கி கொள்ளவும். அதில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று பிரச்சனை எதுவும் வராது.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல்.. சர்க்கரை வள்ளிக்கிழங்கு வெச்சு பாயாசம்… ட்ரை பண்ணி பாருங்க!

Last Updated :Nov 11, 2023, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.