ETV Bharat / sukhibhava

நெருங்கும் தீபாவளி பண்டிகை.. கடைகளில் தரமான பலகாரங்களை தேர்வு செய்வது எப்படி? - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் அட்வைஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 5:52 PM IST

Diwali Festival Foods: பண்டிகை காலங்களில் கடைகளில் பலகாரங்கள் வாங்குவதற்கு முன்பு நாம் செய்யவேண்டியவை என்ன என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் கூறும் அறிவுறுத்தல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ் குமார்

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, பலகாரங்கள் தயாரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களில் தீபாவளி நாளில் நம் வீடுகளில் செய்த பலகாரங்களை உற்றார் உறவினர்களுக்கும், அண்டை அயலாருக்கும் கொடுத்து மகிந்தோம். 2K காலத்தில் எல்லாம் மாற்றிவிட்டது. எண்ணெய் தேய்த்து குளிப்பது மாறி, எல்லாருக்கும் கொடுக்கும் வகையில் பலகாரங்கள் செய்வதும் மாறிவிட்டது.

பலகாரங்களை பெரும்பாலும் கடைகளிலேயே வாங்குகின்றனர். அப்படியாக வாங்கும் போது, தரமான பலகாரங்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியுமா?.. இதைப்பற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் வழங்கும் அறிவுரைகளை பார்க்கலாம்..

  • பண்டிகை நாட்களில் புதிதாக பல கடைகள் முளைக்கும். அந்தக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம், உணவு பாதுகாப்புத்துறையின் சான்று போன்றவை இருக்காது. அங்கு சுகாதாரத்தை எதிர்பார்க்க முடியாது. ஆகையால் உணவு பாதுகாப்புத்துறையின் FSSAI தர சான்று பெற்ற கடைகளிலேயே தின்பண்டங்கள் வாங்க வேண்டும்.
  • நீங்கள் வாங்க நினைக்கும் உணவு பொருட்கள் கண்களைக் கவரும் வகையில் அதிகமான கலர் இருக்கும் பட்சத்தில் அவற்றை வாங்க வேண்டாம். ஏனெனில் அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறமூட்டிகள் பயன்படுத்தியிருப்பர். அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு தீங்கு என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
  • காலாவதி தேதி பார்த்து தான் உணவு பொருட்களை வாங்க வேண்டும். நீங்கள் வாங்க நினைக்கும் ஸ்வீட் எப்போது தயாரிக்கப்பட்டது, எவ்வளவு நாட்களுக்குள் அந்த ஸ்வீட்டை சாப்பிட வேண்டும் என்று பார்த்த பின்னரே வாங்க வேண்டும்.
  • பண்டிகை காலங்களில் ஆஃபர் குவியும். காலாவதி தேதி நிறைவடையும் நிலையில் உள்ள பண்டங்களுக்கு ஆஃபர் கொடுக்கலாம் அதை வாங்காமல் இருப்பது நல்லது.
  • ஈக்கள் மொய்த்த தின்பண்டங்களை வாங்க வேண்டாம். பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டகங்களில் உள்ள பண்டங்களை வாங்கலாம். திறந்த வெளியில் இருக்கும் பண்டங்களை வாங்க வேண்டாம்.
  • நீங்கள் வாங்கும் கடை, சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சுகாதாரம் இல்லாத கடைகளில் பலகாரங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • பலகாரங்களை நியூஸ் பேப்பரில் மடித்து கொடுத்தால் அதை வாங்க வேண்டாம். புட் கிரேட் டப்பாக்களில் கொடுத்தால் மட்டுமே வாங்க வேண்டும்.
  • கிப்ட் பாக்ஸ்களில் ஸ்வீட்ஸ் வாங்கும் போது ஸ்வீட் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர், ஸ்வீட் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் கிப்ட் பாக்ஸின் மீது பிரிண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்டிக்கர் வடிவிலோ, எழுத்து வடிவிலோ இருத்தால் அதை வாங்க வேண்டாம்.
  • பண்டங்கள் காய்ந்து இருப்பின் அவற்றை வாங்க வேண்டாம். மேலும் அதிகமான எண்ணெய் இருப்பின் அவற்றை வங்க வேண்டாம்.

உங்கள் பகுதியில் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக, பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்தாலோ, பலகாரங்களின் தரத்தில் குறைபாடு இருந்தாலோ, 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளிக்கலாம்.

இதையும் படிங்க: பெண்கள் விரும்பும் காட்டன் சேலைகளில் இத்தனை வகையா!.. உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.