ETV Bharat / sukhibhava

நேரம் தவறிய உணவு முறை; இதய நோய்க்கு வழிவகுக்குமா? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 3:21 PM IST

Effects of late Eating in Tamil: காலை 8 மணிக்குக் காலை உணவையும், இரவு 8 மணிக்கு இரவு உணவையும் உண்பவர்களுக்கு கார்டியோ வாஸ்குலார் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாகப் பிரஞ்சு ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Effects of late Eating in Tamil
Effects of late Eating in Tamil

சென்னை: வாழ்க்கையில் இப்போதெல்லாம் எல்லாரும் இந்த தவறை செய்ய ஆரம்பித்து விட்டோம். வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை எல்லாரும் நேரம் தவறிச் சாப்பிடுவதை முறையாகப் பின்பற்றி வருகிறோம். இதனால் என்ன ஆகிவிடப்போகிறது. சாப்பிட டைம் இல்லை, இந்த நேரத்திற்குப் பசிக்கவில்லை என்றெல்லாம் கூறி நேரம் தவறி சாப்பிடுவதால் இருதய நோய்கள் கூட ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிரான்சில் உள்ள யுனிவர்சிட் சோர்போன் பாரிஸ் நோர்ட் என்ற ஆய்வு உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான தொடர்பையும் விவரிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய பர்டன் ஆஃப் தீசஸ் ஆய்வில், கார்டியோ வாஸ்குலார் நோய் அதாவது, இதய தசைகள், வால்வுகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளின் விளைவாகத் தோன்றக்கூடிய பிரச்சனைகளால் ஒரு இலட்சம் மக்கள் தொகையில், 272 பேர் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் வெளியிடப்படப் பிரஞ்சு ஆய்வில், காலை மற்றும் இரவு உணவைச் சரியான நேரத்திற்குச் சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்களைத் தடுப்பதில் உணவு நேரத்தின் பங்கு குறித்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை என்றாலும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரீஜென்சி மருத்துவமனையின் இருதய நோய் நிபுணரான அபினித் குப்தா, நாட்டில் அதிகரித்து வரும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், இரவில் சரியான நேரத்திற்கும், சரியான அளவிலும் சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்று கூறினார். நமது உடலில் உள்ள சர்காடியன் ரிதம் என்ற உள் கடிகாரம் நாள் முழுவதும், உடலியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. இது குறித்து 42 வயதுடைய, சுமார் 1 இலட்சத்து 3 ஆயிரத்து 389 பங்கேற்பாளர்களின் தரவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், காலை உணவைத் தவிர்ப்பது, ஒரு நாளுக்குப் பிறகு உண்ணுபதற்குச் சமமாகும் என கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும், 79 சதவீதம் பேர் பெண்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் மூலம் ஒரு மணிநேரம் தாமதமாகச் சாப்பிடுவதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 6 சதவீதம் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டின் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, இருதய நோயினால் பாதிக்கப்பட்டு 17.7 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்த நிலையில், அதில், ஐந்தில் ஒரு பங்கு இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்தவை.

தெலங்கானா மாநிலம் யசோதா மருத்துவமனையின் இருதயவியல் நிபுணர் வி. ராஜசேகர், நேரம் தவறி உணவு உண்பதால் தூக்கம் பாதிக்கப்படும். இது மறைமுகமாக இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று கூறினார். உணவைச் சரியான நேரத்திற்குச் சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு ஊட்டச்சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்பட்டு, இருதய நோய் ஏற்படும் அபாயம் குறையும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தூக்கமின்மையால் அறிவு மந்தமாகிறதா? அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி தரவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.