ETV Bharat / sukhibhava

குளிர்காலத்தில் டயட் ஃபாலோ பண்ண முடியவில்லையா.. கவலையை விடுங்க.. இத ஃபாலோ பண்ணுங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 2:59 PM IST

Diet tips for the Winter season in Tamil: இப்போது உள்ள மழைக்காலத்திலும் சரி, இனி வரும் குளிர்காலத்திலும் சிரமம் இல்லாமல் எப்படி ட்யட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று பார்க்கலாம்.

குளிர்காலத்திலும் சிரமம் இல்லாமல் எப்படி ட்யட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று பார்க்கலாம்
குளிர்காலத்திலும் சிரமம் இல்லாமல் எப்படி ட்யட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று பார்க்கலாம்

சென்னை: டயட் ஃபாலோ பண்ணுவது சற்று கடினம் தான். இதுவே குளிர்காலத்தில் டயர் ஃபாலோ பண்ணுவது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். மழைக்காலத்தில் குளிர் சற்று அதிகரித்தே காணப்படும். அந்த சமயங்களில் நாம் போர்வைக்குள்ளே இருப்பதையே அதிகம் விரும்புவோம். இது மட்டுமில்லாமல் குளிருக்கு இதமாக சூடாக சாப்பிட வேண்டும் என்று உணவுக்கட்டுப்பாட்டை மறந்து விடுகிறோம்.

குளிர்காலத்தில் ஏற்படும் அதிக பசியால், கையில் கிடைத்த நொறுக்கு தீனீகளையும் விடுவதில்லை. எனவே குளிர்காலத்தில் எப்படி டயட்டை ஃபாலோ பண்ண போகிறோம் என்ற பயம் அனைவரது மனத்திலும் இருக்கும். இனிமேல் அந்த பயம் தேவையில்லை. குளிர்காலத்தில், குளிருக்கு இதமாகவும், அதே வேளையில் டயட்டை ஃபாலோ பண்ணும் வகையிலும் நாங்கள் கூறும் டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

நட்ஸ் தான் தீர்வு: பருப்பு என நாம் கூறும் நட்ஸ்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், விட்டமின்கள் மற்றூம் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை குளிர்காலத்தில் நமக்கு தேவையான வெப்பத்தையும், ஆற்றலையும் தருகின்றன. ஆகையினால் குளிர்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் டயட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் நட்ஸ்களை சாப்பிடலாம்.

இப்போது எந்தெந்த நட்ஸ்களில் என்னென்ன வகையான சத்துக்கள் உள்ளன என்பதையும், டயட்டிற்கு இவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

பாதாம் பருப்பு (Almonds): பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. பாதாமில் விட்டமின் ஈ போன்றவையும் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்றத்திற்கும் உதவுகிறது.

பாதாம் பருப்பு
பாதாம் பருப்பு

அக்ரூட் பருப்பு (Walnuts): அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் புரதச்சத்துக்ளும், நார்ச்சத்துக்களும் உள்ளன. மேலும் இவை உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.

அக்ரூட் பருப்பு
அக்ரூட் பருப்பு

முந்திரி பருப்பு (Cashews): முந்திரி பருப்பில் மெக்னீசியம் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன. இது உடலை சூடாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. மேலும் தசை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

முந்திரி பருப்பு
முந்திரி பருப்பு

பெக்கன் பருப்பு (Pecans): பெக்கன் பருப்பு சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. மேலும் இதில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் உள்ளிட்ட சத்துக்களும் அடங்கியுள்ளன.

பெக்கன் பருப்பு
பெக்கன் பருப்பு

பிரேசில் நட்ஸ் (Brazil Nuts): பிரேசில் நட்ஸில் எலாஜிக் அமிலம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளன. பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய்யின் அபாயம் குறையும். மேலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.

பிரேசில் நட்ஸ்
பிரேசில் நட்ஸ்

பிஸ்தா (Pista): பிஸ்தா பருப்பில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், செலினியம், விட்டமின் பி6, புரதச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை குளிருக்கு ஏற்றவாறும, உடலுக்குத்தேவையான வெப்பத்தையும், ஆற்றலையும் தரும்.

பிஸ்தா
பிஸ்தா

ஹேசல் நட்ஸ் (Hazelnuts): ஹேசல் நட்ஸில் விட்டமின் ஈ மற்றும் செலினியம் உள்ளன. மேலும் இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன.

ஹேசல் நட்ஸ்
ஹேசல் நட்ஸ்

இதையும் படிங்க: இப்படி பண்ணிட்டு இருக்கீங்களா?... சருமத்தை பராமரிப்பதாகக் கூறி நாம் செய்யும் தவறுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.