ETV Bharat / state

‘வெளியூர் சென்றால் சொல்லுங்கள்; இல்லையென்றால் நாங்கள் பொறுப்பல்ல’ - போலீஸ் நோட்டீஸால் பொதுமக்கள் அதிர்ச்சி

author img

By

Published : Feb 7, 2020, 5:52 PM IST

விருதுநகர்: வீட்டின் சாவி எங்கே உள்ளது, வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது என காவல்துறையினரிடம் தெரிவித்தால் மட்டுமே கொள்ளை சம்பவங்களுக்கு காவல்துறை பொறுப்பு ஏற்கும் என காவல் துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

police notice public shock
police notice public shock

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அழகாபுரி, மூவரை வென்றான், சீலநாயக்ககன்பட்டி, காடநேரி, அக்கனாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்தப் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நத்தம்பட்டி காவல் துறையினர், “பொதுமக்கள் சொந்த வேலையாக வெளியூர் செல்லும்போது வீடு பூட்டப்பட்டு அந்த சாவி யாரிடம் உள்ளது, வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது உள்ளிட்ட விவரங்களை நத்தம்பட்டி காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

காவல் துறையினர் நோட்டீஸ்

அவ்வாறு தெரிவிக்காவிட்டால் அவர்கள் வீட்டில் காணாமல் போகும் பொருள்களுக்கு காவல் நிலையம் பொறுப்பல்ல” என்ற வாசகங்களை எழுதி பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

Intro:விருதுநகர்
07-02-2020

வீட்டின் சாவி எங்கே உள்ளது, வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது என காவல்துறையினரிம் தெரிவித்தால் மட்டுமே கொள்ளை சம்பவங்களுக்கு காவல்துறை பொறுப்பு - காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி...

Tn_vnr_04_police_notice_public_shock_vis_script_7204885Body:வீட்டின் சாவி எங்கே உள்ளது, வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது என காவல்துறையினரிம் தெரிவித்தால் மட்டுமே கொள்ளை சம்பவங்களுக்கு காவல்துறை பொறுப்பு என நத்தம்பட்டி காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அழகாபுரி, மூவரை வென்றான், சீலநாயக்ககன்பட்டி, காடநேரி, அக்கனாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தப் பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நத்தம்பட்டி காவல்துறையினர் பொதுமக்கள் சொந்த வேலையாக வெளியூர் செல்லும்போது"வீடு பூட்டப்பட்டு அந்த சாவி யாரிடம் உள்ளது" என்பதையும், "வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது என்பதையும் " நத்தம்பட்டி காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கா விட்டால் அவர்கள் வீட்டில் காணாமல் போகும் பொருட்களுக்கு காவல்நிலையம் பொறுப்பல்ல என்ற வாசகங்களை எழுதி பல்வேறு பகுதிகளில் காவல் துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.