ETV Bharat / state

'உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்கப்போகிறார்' - ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Nov 20, 2020, 3:47 PM IST

உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்கப்போகிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

minister rajendra balaji  Nayantara  Udayanidhi Stalin
'உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்கப்போகிறார்' - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், "விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு நாடகம் போடுவார்கள். ஏமாற்றிப்பார்ப்பார்கள். இந்த மாவட்டத்திற்கு இரண்டு பேரும் என்ன செய்தார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிக்கும் அனைத்து வகையான கூட்டு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்பட்டது.

'உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்கப்போகிறார்' - ராஜேந்திர பாலாஜி

அம்மாவின் ஆட்சியில்தான். விருதுநகரில் மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தது தான்தான் என்கிறார் ஸ்டாலின். மருத்துவக் கல்லூரியையும், அரசு கல்லூரியையும் கொண்டு வந்தது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்தான். ஸ்டாலின் பேசுவது எல்லாம் பொய். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புதிய பிரச்னை ஒன்று உள்ளது.

அவரை பழிவாங்க அவரது அண்ணன் மு.க. அழகிரி கிளம்பிவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று காவல் துறையிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். நாங்கள் நயமாக பேசி அண்ணா அறிவாலயத்தில் ஒரு பக்க வாசல் ஸ்டாலினுக்கும் மற்றொரு பக்க வாசல் மு.க. அழகிரிக்கும் பிரித்து கொடுப்போம்.

உதயநிதி ஸ்டாலின் மீது நயன்தாரா புகார் கொடுக்கப்போகிறார். உதயநிதி ஸ்டாலின் சிறைக்கு போகப்போகிறார். எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: 'சிறுபான்மையினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.