ETV Bharat / state

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு என்றைக்கும் பலிக்காது - ராஜேந்திர பாலாஜி

author img

By

Published : Jun 24, 2020, 3:52 PM IST

விருதுநகர்: தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல குடிபெயர்ந்த தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என யாருமே திமுகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

rajendra balaji
rajendra balaji

தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு கலை அரங்கம் மற்றும் இரண்டு பேருந்து நிழற்குடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் மட்டுமல்ல குடிபெயர்ந்த தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என யாருமே திமுகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்கு காரணமான காங்கிரஸ் கட்சிக்கு துணைபோன கட்சி திமுக. இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொளுந்துவிட்டு எறியக் கூடியது என்னவென்றால் திட்டமிட்டு காங்கிரஸ் ஈழ தமிழர்களை கொன்று குவித்தனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா.

தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்தியில் ஆளும் மோடியும் நடக்க விடுவார்களா என்பதை யோசிக்க வேண்டும். தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கரோனா, இதில் அரசின் பணி என்ன என்பதை கவனிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் மக்களை காக்க, பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. இதை ஏற்க முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் கண்டுபிடித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாம் என நினைக்கிறார். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு என்றைக்கும் பலிக்காது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தந்தை - மகன் இறந்த விவகாரம்: கொலை வழக்காகப் பதிவுசெய்ய கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.