ETV Bharat / state

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கட்டடம் தரைமட்டம்

author img

By

Published : Jan 30, 2020, 1:18 PM IST

விருதுநகர் : வி.முத்துலிங்கபுரம் ஊராட்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஐந்து அறைகள் கொண்ட கட்டடம் தரைமட்டமானது

Explosion at fireworks factory in Virudhunagar
விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கட்டடம் தரைமட்டம் !

விருதுநகர் மாவட்டம் வி.முத்துலிங்கபுரம் ஊராட்சியில் காளிராஜ் (38) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில், 40 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வேலைபார்த்துவருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது ஆலையைச் சுற்றியிருந்த புற்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக தன் கட்டுப்பாட்டை இழந்து, பட்டாசுகள் வைத்திருந்த அறையில் மோதியது.

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

இந்த விபத்தில் ஆலை கட்டடத்தில் இருந்த ஐந்து அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்த விருதுநகர், சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் அதனை ஆய்வு செய்தார். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

Intro:விருதுநகர்
30-01-2020

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஐந்து அறைகள் தரைமட்டம்

Tn_vnr_02_fire_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் வச்சக்கரப்பட்டி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வச்சக்கரப்பட்டி அருகே உள்ள வி.முத்துலிங்கபுரத்தில் காளிராஜ் (38) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 40 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இன்று காலை வழக்கம்போல் கம்பெனியில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது புற்களை சுத்தம் செய்ய டிராக்டர் வந்தபோது பட்டாசு அறையில் மோதிய விபத்தில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்த விருதுநகர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.