ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: 108 போர்வைச் சாற்றும் வைபவம்

author img

By

Published : Dec 15, 2021, 5:23 PM IST

ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல்
ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வைச் சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவத் திருத்தலங்களில் சிறப்புப் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனைப் பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று (டிசம்பர் 15) அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.