ETV Bharat / state

கணவனை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவி - காவல் துறை விசாரணை!

author img

By

Published : Aug 14, 2020, 3:03 AM IST

விழுப்புரம்: குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி, மகள் மற்றும் உடந்தையாக இருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Wife who killed husband with daughter's help - Police investigation
Wife who killed husband with daughter's help - Police investigation

விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் சின்னகள்ளிபட்டு பகுதியிலுள்ள அங்காளம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.11) தனது வீட்டில் தனசேகர் சந்தேகமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் அப்பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், தனசேகரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவி, மகளிடம் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சத்யா ஆகியோர், முருகவேல் என்பவருடன் சேர்ந்து தனசேகரனை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.