ETV Bharat / state

'நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கேயே படுப்போம்..' - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!

author img

By

Published : Jun 24, 2022, 3:05 PM IST

Updated : Jun 24, 2022, 3:24 PM IST

மதுபோதையில் பெட்ரோல் நிலைய மேலாளர் மற்றும் வாடிக்கையாளர்களை தாக்கிய இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கயே படுப்போம்.. - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!
நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கயே படுப்போம்.. - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!

விழுப்புரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ஜானகிபுரம் பெட்ரோல் நிலையத்தில், கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் நேற்று (ஜூன் 23) இரவு இரண்டு இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். தங்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பிய இளைஞர்கள், அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருசக்கர வாகனத்தை நிறுத்தி, பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இதனைப்பார்த்த பெட்ரோல் நிலைய மேலாளர் கார்த்தி, ''இரு சக்கர வாகனத்தை சற்று தள்ளி நிறுத்திப்பேசுங்கள். மற்றவர்களும் பெட்ரோல் போட வேண்டும்'' எனக் கூறியுள்ளார். ஆனால், மதுபோதையில் இருந்த இளைஞர்கள், ''இங்குதான் நிறுத்துவோம்..'' என வாதம் செய்தபடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் மேலாளர் கார்த்தியை தாக்க முயற்சி செய்துள்ளனர்.

'நாங்க போவோம்.. இல்ல பாய விரிச்சி இங்கேயே படுப்போம்..' - அதகளம் செய்த போதை ஆசாமிகள்!

இந்த நேரத்தில் அங்கு டீசல் நிரப்புவதற்காக வந்த வாடிக்கையாளர்களான ஹரிஹரன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர், இதனைத் தட்டிக் கேட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் இளைஞர்கள் பலமாகத்தாக்கியுள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனைக்கண்டு பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் பலரும் பயந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அத்துமீறலில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'வலிமை' பட பாணியில் செல்போன் பறிப்பில் ஈடுபடும் கும்பல் - 16 வயது சிறுமி உட்பட 5 பேர் கைது!

Last Updated : Jun 24, 2022, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.