ETV Bharat / state

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளருக்கு சரமாரி கத்திக்குத்து!

author img

By

Published : Nov 11, 2019, 11:29 PM IST

Updated : Nov 12, 2019, 8:04 AM IST

வேலூர்: திருப்பத்தூரில் உணவகத்தில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

tirupattur

திருப்பத்தூரில் அண்ணாமலை வணிக வளாகத்தில் ரவி (54) என்பவர் உணவகம் நடத்திவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்ற ஆட்டோ ஓட்டுநர் (33) ரவியின் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டபின் பிரதாப்பிடம் உணவக உரிமையாளர் ரவி பணம் கேட்டுள்ளார். இதற்கு பிரதாப் ”நான் ஏற்கனவே பணத்தைக் கொடுத்துவிட்டேன்” என்று பொய் சொன்னதாகத் தெரிகிறது.

இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதாப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உணவக உரிமையாளர் ரவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரவியின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ரவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக் குத்து

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநர் பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இப்படியும் ஓர் உணவு விடுதியா... உலகையே வியப்பில் ஆழ்த்திய தொழில்நுட்பத்தின் பிரமாண்டம்!

Intro:திருப்பத்தூரில் பட்டப்பகலில் சாப்பிட்டு சென்ற வாலிபரிடம் பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு கத்தி குத்து! வாலிபர் கைதுBody:




வேலூர் மாவட்டம்,

திருப்பத்தூர் அண்ணாமலை வணிகவளாகத்தில் ரவி (54) என்பவர் ஓட்டல் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரதாப் ஆட்டோ ஓட்டுனர் (33) என்ற வாலிபர் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு விட்டு சென்ற பிரதாப்விடம் ரவி ஹோட்டல் உரிமையாளர் பணம் கேட்டுள்ளார். பிரதாப் நான் ஏற்கனவே பணத்தைக் கொடுத்து விட்டேன் என்று பொய் கூறியுள்ளார்.இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பணம் கொடுக்காத பிரதாப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியை சரமாரியாக குத்தியுள்ளார் இதனால் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் அடைந்த ரவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இது குறித்து திருப்பத்தூர் நகர போலிசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.Conclusion:
Last Updated :Nov 12, 2019, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.