ETV Bharat / state

கர்ப்பிணி உயிரிழப்பு - தவறான சிகிச்சை காரணமா?

author img

By

Published : Oct 30, 2021, 2:15 PM IST

வேலூரில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி இறந்ததாக கூறி மருத்துவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

vellore news  vellore latest news  pregnant lady death  pregnant lady death in vellor  suspect in death on pregnant lady in vellor  கர்ப்பிணி உயிரிழப்பு  வேலூரில் கர்ப்பிணி உயிரிழப்பு  தவறான சிகிச்சை  தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு  வேலூர் செய்திகள்
கர்ப்பிணி உயிரிழப்பு

வேலூர்: லத்தேரி பகுதியில் வசித்து வந்தவர்கள் சுரேஷ்குமார் - சந்தியா தம்பதியினர். சந்தியா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சந்தியாவை கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக வேலூர் பாகாயத்தில் உள்ள சிஎம்சி சாட் (CMC CHAD) மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நேற்று (ஆக 29) காலை சந்தியாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், திடீரென சந்தியா உயிரிழந்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகளை முற்றுகையிட்டனர்.

மேலும் சிகிச்சைக்கு அனுமதித்தபோது சந்தியா நன்றாக இருந்ததாகவும் தவறான சிகிச்சையினால் தான் அவர் இறந்து விட்டதாகவும் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த வேலூர் பாகாயம் காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சந்தியாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் சந்தியாவின் கணவர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நகை வாங்குவது போல் நடித்து ஒன்றரை பவுன் செயின் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.