ETV Bharat / state

"ஸ்டாலினை தோளில் சுமப்பதில் வெட்கமில்லை" - அமைச்சர் துரைமுருகன் உணர்ச்சி பொங்க விளக்கம்!

author img

By

Published : Apr 25, 2023, 1:25 PM IST

வேலூரில் நடைபெற்ற அரசின் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "தான் ஒரு கோபாலபுரத்து விசுவாசி எனவும், தலைவரின் மகனை தோளில் சுமப்பதில் தனக்கு என்ன வெட்கம்" எனவும் உணர்ச்சி பொங்க கூறினார்.

Minister KN Nehru and Duraimurugan explained the financial statement of the government in a Vellore public meeting
வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கினர்

அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர்..! நாங்கள் மாணவர்கள் - அமைச்சர் கே.என்.நேரு

வேலூர்: காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று நிதிநிலை அறிக்கை குறித்து பேசினர்.

பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கு பேராசிரியர், நாங்கள் எல்லாம் மாணவர்கள். அவர் சொல்வதை நாங்கள் செய்து வருகிறோம். சட்டத்தை படித்து விட்டு சட்டப்பேரவையின் முன்னவராக இருக்கிறார். அவரைப் போல அவை முன்னவராக யாராலும் இருக்க முடியாது. காட்பாடி மக்களுக்காக அவர் நிறைய செய்திருக்கிறார். அவர் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளாதீர்கள் மக்களே" என்றார்.

மேலும், "வேலூர் மாநகராட்சியை பொருத்தவரையில் 60 வார்டுகளில் அனைத்து பகுதிகளிலும் இன்னும் ஓராண்டு காலத்தில் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடித்து தருவேன். இந்த ஆண்டு 97 கோடி ரூபாய் சாலைக்காக தந்திருக்கிறோம். மாநகராட்சிக்கு 328 கோடி ரூபாய் தந்திருக்கிறோம். மேலும் குடிநீர் பிரச்சனை இன்னும் பத்து இருபது நாட்களுக்குள் மே 15ஆம் தேதிக்குள் முழுமையாக முடித்து உடனே பிரச்சனை தீர்க்கப்படும். பாதாள சாக்கடையும் இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "காட்பாடி நகரமாக நன்கு வளர்ச்சி அடைந்து விட்டது. காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் அதிக வழக்குகள் வருகிறது. சமாளிக்க முடியவில்லை என டிஎஸ்பி சொன்னார். சட்டப்பேரவையில் துண்டு சீட்டில் எழுதி முதல்வரிடம் காண்பித்தேன். அப்போதே சட்டப்பேரவையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைக்க அறிவித்தார்.அம்மாவுக்கு ஆயிரம், பொண்ணுக்கு ஆயிரம் கொடுத்தாச்சு. பஸ் விட்டு இருக்கோம். போர் அடிச்சா பஸ் ஏறு ஆற்காடு போ, அங்கு வரும் பஸ்ஸில் மீண்டும் ஏறு குடியாத்தம் போ. யாரு என்ன கேட்கப் போகிறார்கள்" என மகளிர் இலவச பேருந்து திட்டத்தை மேற்கோள் காட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். புதியதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கிறோம். என்னை ஒரு தாசில்தார் சந்தித்தார், நான்தான் முதியோர் உதவித்தொகை கொடுக்கும் தாசில்தார் என்று அறிமுகம் செய்து கொண்டார். நீங்கள் கொடுக்கிற தாசில்தாரா? இல்ல (வாங்குற தாசில்தாரா) என்று கேட்டேன். அதற்கு அவர் கொடுக்கிற தாசில்தார் தான் சார் என்று பதில் சொன்னார்.

தாசில்தார் அலுவலகங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். 15 ஆயிரம், 15 ஆயிரம் என்று ஏலம் போடுகிறார்கள். ஒரு ஆளை விட்டு நாளை நோட்டமிட சொல்லி இருக்கிறேன். தாசில்தார் அலுவலத்தில் ஏஜென்ட்கள் இருந்தால், அந்த தாசில்தாரை பிடித்து உள்ளே (ஜெயிலில்) போட்டு விடுவேன்" என்றார்

"ஸ்டாலினை தோளில் சுமப்பதில் வெட்கமில்லை"

தொடர்ந்து மேடையில் பேசிய துரைமுருகன், "கோபாலபுர வீட்டிற்கு நான் சென்றபோது தலைவர் (ஸ்டாலின்) சின்ன பையன். நாங்கள் எல்லாம் ஓய் என்று மிரட்டுவோம். ஓடி போய் விடுவார். பிறகு வளர்ந்து தோலுக்கு வந்த தோழனாகி, இன்று தலைக்கு மேல் வளர்ந்து எனக்கே தலைவனாகி இருக்கிறார்.

நான் ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். எங்கேயோ இருந்து வந்த என்னை காட்பாடி தொகுதியில் அறிமுகப்படுத்திய போது யோவ் துரை நீ வன்னியரா? என்று கலைஞர் கேட்டார். நான் ஏனுங்க என்ன திடீர்னு இந்த கேள்வி கேட்டீங்க என்று கேட்டேன். 62-இல் இருந்து அவருடன் பழகி வந்து கொண்டிருக்கிறேன். 71 வரை அவருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது. அப்படிப்பட்ட பழக்கம் எங்களுக்குள் இருந்தது. அப்பேற்பட்டவர் என்னை வளர்த்தவர். அத்தகைய தலைவனின் மகனை என் தோளில் சுமப்பதிலே எனக்கு என்ன வெட்கம். அதைத்தான் நான் சொன்னேன் கோபாலபுரத்து விசுவாசி என்று. சொல்லுகிற தைரியம் எனக்கு உண்டு. நான் என் இறுதி மூச்சு வரையில் அப்படித்தான் இருப்பேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

மேலும், "பொதுப் பணியில் இருக்கக்கூடிய நாம், அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். கட்டவுட் வைக்காதீர்கள் என்று சொல்கிறோம். காட்பாடியில் மட்டும் கட்டவுட் வைக்கலாம் என்று சட்டம் இருக்கா. கட்டவுட் வைக்கும் வேலைகளை நிறுத்துங்கள். மீறி வைத்தால் அந்த விழாவுக்கு நான் வரமாட்டேன். ஓட்டு கேட்கும் போது ஒரு பையனா வந்தவன் இன்று என் பையனோட வந்திருக்கேன்” என்று பேசினார்.

இதையும் படிங்க: Karnataka Election 2023 : நட்சத்திர வேட்பாளர்கள் மீதான வழக்கு பட்டியல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.